முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முசிறி கைலாசநாதர் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் : சட்டசபையில் அமைச்சர் தகவல்

சனிக்கிழமை, 29 ஜூன் 2024      தமிழகம்
Shekharbabu 2024-06-24

Source: provided

சென்னை : முசிறி கைலாசநாதர் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சட்ட சபையில் கேள்வி நேரத்தில், பட்டுக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. அண்ணாதுரை ஆலத்தூர் ஊராட்சி முசிறி கைலாசநாதர் கோவிலுக்கு திருப்பணி செய்ய அரசு ஆவன செய்யுமா? என கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, முசிறி கைலாசநாதர் கோவிலில் ஏற்கனவே 5 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டு 2 ஆயிரம் கோவிலில் கும்பாபிஷேகம் என்ற இலக்கில் இந்த கோவிலும் இடம் பெற்றுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் திருப்பணிகள் முடிக்கப்பட்டு முசிறி கைலாசநாதர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும். 

தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார், கன்னியாகுமரி பத்ரகாளியம்மன் கோவிலில் இறுதி நாள் விழாவிற்கு அரசு விடுமுறை அளிக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, பத்ரகாளியம்மன் கோவில் விழாவிற்கு அரசு விடுமுறை விடுவது தொடர்பாக மாவட்ட கலெக்டர் கருத்துரு பெற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து