முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேர்மையான விண்ணப்பதாரர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்: நீட் தேர்வு முழுவதையும் ரத்து செய்வது நியாயமாக இருக்காது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

புதுடெல்லி, இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, கடந்த மே 5-ம் தேதி நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் கடந்த மாதம் 4-ம் தேதி வெளியிடப்பட்டது. வினாத்தாள் கசிவு, 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட சர்ச்சைகளால் மறு தேர்வுக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள் பலர் வழக்கு தொடர்ந்தனர். அதன்பேரில் மத்திய அரசுக்கும், தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமைக்கும் சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கிடையே, நிலுவையில் உள்ள நீட் தேர்வு தொடர்பான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் 8-ம் தேதி விசாரணைக்கு வருகின்றன. சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட 8-ம் தேதிக்கான வழக்கு பட்டியலில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு 26 நீட் தேர்வு மனுக்கள் விசாரணைக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் தேர்வில் பெரிய அளவில் ரகசியத்தன்மை மீறப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், முழு தேர்வையும் ரத்துசெய்வது நியாயமானதாக இருக்காது. தேர்வை முற்றிலுமாக ரத்துசெய்வது, 2024-ம் ஆண்டு வினாத்தாளை எழுத முயன்ற லட்சக்கணக்கான நேர்மையான விண்ணப்பதாரர்களுக்கு "தீவிரமாக ஆபத்தை விளைவிக்கும்" என தெரிவித்துள்ளது. மேலும் சதி, ஏமாற்றுதல், ஆள்மாறாட்டம் செய்தல், நம்பிக்கை மீறல் உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக முழு விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரமாணப்பத்திரத்தின் முக்கிய அம்சங்கள்:

1)  நீட் தேர்வு முடிவுகளை ரத்துசெய்யக்கூடாது.

2) நடந்து முடிந்த நீட் தேர்வில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததற்கு ஆதாரமில்லை.

3) நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்துசெய்வதால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

4) நீட் தேர்வு முறைகேடு புகார்களை விசாரிக்க சிபிஐ-க்கு உத்தரவிட்டுள்ளோம்.

5) தேர்வுகள் வெளிப்படைத்தன்மையுடனும், நியாயமாகவும் நடைபெற புதிய சட்டத்தை இயற்றியுள்ளோம்.

6) நியாயமற்ற வழிமுறைகள் தொடர்பான குற்றங்களுக்கு கடும் தண்டனையை சட்டம் அளிக்கும்.

7) தேர்வுகளை திறம்பட நடத்த, பரிந்துரைகளை அளிக்க உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து