முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயிற்சியாளராக காம்பீர் நியமனம்: கோலியை நிராகரித்ததா பி.சி.சி.ஐ..?

வியாழக்கிழமை, 11 ஜூலை 2024      விளையாட்டு
BCCI 2023 06 13

Source: provided

மும்பை: பயிற்சியாளராக காம்பீர் நியமனம் செய்யப்படுவதற்கு முன் ஹர்திக் பாண்ட்யாவிடம் பி.சி.சி.ஐ. ஆலோசனை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது தொடர்பாக விராட் கோலியிடம் ஆலோசனை நடத்தவில்லை என்று தெரிகிறது.

பிசிசிஐ அறிவிப்பு...

இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவிக்காலம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இரண்டு போட்டியாளர்களான காம்பீர்  மற்றும் டபிள்யூ.வி. ராமன் ஆகியோரை பிசிசிஐ நேர்காணல் செய்தது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீரை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது.

ஆலோசிக்கவில்லை...

இந்திய அணி இந்த மாதம் இறுதியில் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக காம்பீர்  பொறுப்பேற்கவுள்ளார். இதன்மூலம் இந்திய அணியின் இளம்வயது தலைமை பயிற்சியாளர் என்ற பெருமையை கவுதம் காம்பீர்  பெற்றுள்ளார். இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக காம்பீர்  அறிவிக்கப்படுவதற்கு முன்பு விராட் கோலியிடம் பிசிசிஐ கலந்தோலோசிக்கவில்லை என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கேப்டனாக பாண்ட்யா...

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரோகித், கோலி ஓய்வு பெற்றுள்ளனர். அதனால் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இனிமேல் டி20 போட்டிகளுக்கு பாண்ட்யா தான் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தலைமை பயிற்சியாளராக காம்பீரை நியமனம் செய்வதற்கு முன்பு ஹர்திக் பாண்டியாவிடம் பிசிசிஐ கலந்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காம்பீருக்கும் கோலிக்கும் இடையே கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் வாக்குவாதம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இருவரும் கட்டிப்பிடித்து பிரச்சனையை முடித்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து