முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 250-ஐ தாண்டியது: கனமழைக்கு இடையே 2- வது நாளாக மீட்புப்பணி தீவிரம்

புதன்கிழமை, 31 ஜூலை 2024      இந்தியா
Rescue-2-2024-07-31

திருவனந்தபுரம், கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 250-ஐ தாண்டியுள்ளது. கனமழைக்கு இடையே நேற்று 2- வது நாளாக மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்ற நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மண்ணுக்குள்...

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மிகப்பெரிய சம்பவமாக மாறி இருக்கிறது. அதிலும் முண்டக்கை பகுதி மிகப்பெரிய அழிவை சந்தித்து இருக்கிறது. அங்கிருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதனால் அந்த இடத்தில் வீடுகள் தடமே இல்லாமல் காட்சி அளிக்கிறது. அனைத்து இடங்களும் மண்ணாலும், மரங்கள் மற்றும் பாறைகளாலும் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் சிக்கி 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், மண்ணில் புதையுண்ட பலரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.இதனால், உயிரிழப்பு எண்ணக்கை மேலும் உயர வாயப்புள்ளதாக அஞ்சப்பட்டது. 

தேடும் பணி தீவிரம்....

இந்நிலையில், கேரள நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்கள் 225 பேர் குறித்த விவரங்கள் தெரியாததால் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில், 94 சடலங்கள் அடையாளம் காணப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பிறகு, இதுவரை 64 சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பலர் மாயமான நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. 400க்கும் மேற்பட்ட வீடுகளில், தற்போது 40 வீடுகள் மட்டுமே எஞ்சியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

38 பேரின் உடல்கள்... 

சூரல்மலை நிலச்சரிவின்போது ஆற்றுவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 38 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் பகுதியில் சாலியாறு ஆற்றில் இருந்து 38 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட உடல்கள் மேம்பாடிக்கு கொண்டுவரப்படுகின்றன. 38 பேரின் உடல்களை உறவினர்கள் அடையாளம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கனமழை நீடிக்கும்...

கேரள மாநிலத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம்,கொல்லம், தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம்,இடுக்கி, திருச்சூர், பாலக்காட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் மூலம்... 

வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் நேற்று 2வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இதுவரை நிலச்சரிவில் சிக்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், கோழிக்கோடு மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட 250 கிலோ உணவு பொருட்கள் மற்றும் 100 குடிநீர் பாட்டில்கள் நிலச்சரிவால் சேதமடைந்த சூரல்மலை, முண்டக்கை பகுதிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் இந்திய விமானப்படை விநியோகித்தது. 

முதல்வர் வேண்டுகோள்...

94 சடலங்கள் அடையாளம் காணப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின், இதுவரை 64 சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்னும் 225 பேர் குறித்த விவரங்கள் தெரியாததால் தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது. மேலும் 400க்கும் மேற்பட்ட வீடுகளில் தற்போது 40 வீடுகள் மட்டுமே எஞ்சியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.  வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உதவி எண்கள்...

வயநாடு நிலச்சரிவில் காணாமல் போனோர் பற்றி தகவல் தெரிவிக்க அவசர உதவி எண் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி வயநாடு மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையத்தின் 807 840 9770 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காணாமல் போனோர் மற்றும் மருத்துவமனையில் உள்ளோர் பற்றி தகவல் தெரிவிக்கவும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ராணுவம் மற்றும் விமானப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராணுவம், விமானப்படையுடன் கடற்படையும் மீட்புப் பணியில் இணைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து