முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை மீண்டும் உயர்வு

புதன்கிழமை, 31 ஜூலை 2024      தமிழகம்
Gold 2022-12-31

Source: provided

சென்னை : கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்துவந்த நிலையில் நேற்று (ஜூலை 31) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,420-க்கும், பவுனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு பவுன் ரூ.51,360-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் 91 ரூபாய்க்கு விற்பனையானது.

கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, கடந்த மே 20-ம் தேதி ரூ.55,200 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது. இதைத் தொடர்ந்து விலை ஏற்ற இறக்கமாக இருந்துவந்த நிலையில் மத்திய பட்ஜெட் தாக்கலில் அறிவிக்கப்பட்ட இறக்குமதி சுங்க வரி குறைப்பால் விலை சரியத் தொடங்கியது.

பட்ஜெட் தாக்கலான கடந்த ஜூலை 23 முதல் 26 வரை தொடர்ந்து 4 நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 27) சற்றே உயர்ந்தது. அன்றைய தினம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6465-க்கும், பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு பவுன் ரூ.51,720-க்கும் விற்பனையானது.

அதன்பின்னர் இந்த வாரம் திங்கள் (ஜூலை 29), செவ்வாய் (ஜூலை 30) கிழமைகளில் தொடர்ந்து விலை குறைந்தது. நேற்று (செவ்வாய்க்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.6,385-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.240 குறைந்து ஒரு பவுன் ரூ.51.080-க்கு விற்பனையானது. இந்நிலையில் நேற்று (ஜூலை 31) மாதத்தின் கடைசி நாளில் தங்கம் விலை சற்றே உயர்ந்து பவுனுக்கு ரூ.51,360-க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து