முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தணிக்கையாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டோருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

வியாழக்கிழமை, 1 ஆகஸ்ட் 2024      தமிழகம்
CM-1-2024-08-01

சென்னை, சென்னை தலைமைச் செயலகத்தில், நிதித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் தணிக்கைத்துறைகளில் கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர், உதவி ஆய்வாளர் மற்றும் உதவி தணிக்கை ஆய்வாளர் பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. மூலம் தெரிவு செய்யப்பட்ட 780 நபர்களுக்கு  பணிநியமன ஆணைகள் வழங்கிடும் அடையாளமாக 20 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

நிதித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு தணிக்கைத் துறையில் 7 கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர் பணியிடங்களும், 928 இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணியிடங்களில் முதற்கட்டமாக 700 இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணியிடங்களும், உள்ளாட்சி நிதி தணிக்கை துறையில் 43 உதவி ஆய்வாளர்கள் பணியிடங்களும் மற்றும் இந்து சமய அறநிலைய  நிறுவனங்களின் தணிக்கைத் துறையில் 30 உதவி தணிக்கை ஆய்வாளர் பணியிடங்களும் என மொத்தம் 780 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

புதிதாக நியமனம் பெற்றுள்ள  தணிக்கையாளர்களுக்கு சென்னை, மதுரை, கோவை, தஞ்சாவூர் மற்றும் தூத்துக்குடியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் தணிக்கைப்பணி தொடர்பான முழுமையான பயிற்சி வழங்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  

இந்நிகழ்ச்சியில்,  அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா,  நிதித்துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன்,  நிதித்துறை செயலர் (செலவினம்) எஸ். நாகராஜன்,  தலைமை தணிக்கை இயக்குநர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன்,  கூட்டுறவு தணிக்கைத்துறை இயக்குநர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து