முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது சில கட்சிகளுக்கு பிடிக்கவில்லை : பிரதமர் மோடி விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2024      இந்தியா
Modi 2024-01-17

Source: provided

புவனேஷ்வர் : விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது காங்கிரஸ் மற்றும் சில கட்சிகளுக்கு பிடிக்கவில்லை என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். 

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி கூறியதாவது:-  

ஒடிசாவில் இரட்டை இன்ஜின் ஆட்சி நடப்பதால் வளர்ச்சிக்கான பயணம் புதிய சிறகுகளை பெற்றிருக்கிறது. ஒடிசாவில் பழங்குடியின பெண் எனக்கு இனிப்பு ஊட்டிய போது என் தாயின் நினைவு வந்தது. அந்த பெண்ணின் ஆசிர்வாதம் போன்ற உணர்வுப்பூர்வமான அனுபவம் தான் என் வாழ்வின் மூலதனம். என் அம்மா உயிருடன் இருந்தவரை என் பிறந்தநாளுக்கு அவரிடம் ஆசி பெறுவேன் என்று கூறினார்.  

விநாயகர் சதுர்த்தியை கொண்டாட சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி விட்டிற்கு சென்றது குறித்து பேசிய பிரதமர் மோடி,  விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது காங்கிரஸ் மற்றும் சில கட்சிகளுக்கு பிடிக்கவில்லை. இதனால் நான் தலைமை நீதிபதி வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டதை பொறுக்க முடியாமல் விமர்சனம் செய்கின்றனர். அதிகாரப்பசி உள்ளவர்கள் நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என நினைப்பவர்கள், அதை பொறுக்க முடியாமல் விமர்சிக்கின்றனர் என்றார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து