முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகமான பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும்: ராகுல் காந்தி அழைப்பு

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2024      இந்தியா
Rahul-Gandhi-2024-08-22

Source: provided

புதுடெல்லி : அரசியல் அரங்கில் பெண்களின் குரலை வலுப்படுத்தவும், சமூகத்தில் தேவையான மாற்றத்தை ஏற்படுத்தவும் இந்திரா தோழமை அமைப்பு என்ற திட்டத்தை காங்கிரஸ் கட்சி ஏற்படுத்தி உள்ளது. 

இந்த அமைப்புகள் மூலம் அதிக அளவில் பெண்கள் அரசியலில் அடியெடுத்து வைக்குமாறு காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அழைப்பு விடுத்து உள்ளார். 

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

அரசியலில் பெண்களின் குரலை வலுப்படுத்தும் நோக்கில் ஓராண்டுக்கு முன்பு இந்திரா தோழமை அமைப்பை தொடங்கினோம். தற்போது இந்த முயற்சி பெண்களின் தலைமைத்துவத்துக்கான சக்திவாய்ந்த இயக்கமாக வளர்ந்துள்ளது. 

உண்மையான சமத்துவம் மற்றும் நீதிக்காக அதிக பெண்கள் அரசியலுக்கு தேவைப்படுகிறார்கள். எனவே உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஆர்வமாக இருக்கும் பெண்கள் அனைவரும் சக்தி அபியான் திட்டத்தில் சேர்ந்து பெண்களை மையமாக கொண்ட அரசியலில் தீவிர பங்கேற்பாளர்களாக மாறுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

இதன் மூலம், வலுவான அடிமட்ட அமைப்புகளை உருவாக்குவதற்கும், அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் நீங்கள் பங்களிப்பீர்கள். எங்களுடன் இணைந்து இன்றே http:shaktiabhiyan.in-ல் பதிவு செய்யுங்கள். கிராமம் முதல் ஒட்டுமொத்த தேசம் வரை இணைந்தே மாற்றத்தை ஏற்படுத்துவோம். இவ்வாறு அந்த பதிவில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து