Idhayam Matrimony

80 ஆண்டுகளுக்கு பின் வானில் தோன்றும் அதிசய நட்சத்திரம் : நாசா விஞ்ஞானிகள் தகவல்

திங்கட்கிழமை, 7 அக்டோபர் 2024      உலகம்
NASA 2024-10-07

Source: provided

வாஷிங்டன் : விஞ்ஞான உலகம் அதிசயங்கள் பல நிறைந்தது. பூமியைத் தாண்டி மனிதகுலத்தை ஆச்சரியப்படுத்தும் விஷயங்கள் பற்பல. அந்த வரிசையில், சுமார் 80 ஆண்டுகளுக்கு பிறகு வானில் ஓர் அதிசய நட்சத்திரம் தோன்ற உள்ளது.

பூமியிலிருந்து 3000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளதொரு வான் நட்சத்திரம் 1946-ம் ஆண்டுக்கு பின் இப்போது மீண்டும் தென்பட உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ‘பிளேஸ் ஸ்டார்’, ‘டி கரோனே போரியாலிஸ்’ ஆகிய இரு பெயர்களால் அழைக்கப்படும் இந்த வான் நட்சத்திரம், கடைசியாக 1946-ஆம் ஆண்டு வானில் தென்பட்டது. 

இந்த நிலையில், அடுத்த சில நாள்களில் இந்த நட்சத்திரம் எப்போது வேண்டுமானாலும் வானில் தென்படலாம் என்று தெரிவித்துள்ள நாசா விஞ்ஞானிகள், வானில் அதிகபட்சமாக இருவாரங்களுக்கு மட்டுமே தென்படும் இந்த நட்சத்திரத்தை, அதன்பின், 80 ஆண்டுகளுக்கு பின்னரே மீண்டும் காண இயலும் என்றும் தெரிவிக்கின்றனர். பிளேஸ் ஸ்டார் நட்சத்திரத்தை முதன்முறையாக பார்த்தவராக ஜெர்மனியின் அர்ஸ்பர்க் பகுதியை சேர்ந்த பர்சர்ட் என்ற நபர் அறியப்படுகிறார்.

1217-ஆம் ஆண்டு வானில் இந்த நட்சத்திரம் தென்பட்டதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், பிளேஸ் ஸ்டார் நட்சத்திரத்தை காண்பதென்பது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே காணக் கிடைக்கும் வாய்ப்பாக விஞ்ஞானிகள் விவரிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து