Idhayam Matrimony

மருத்துவத்துக்கான நோபல் பரிசு: அமெரிக்காவை சேர்ந்த இருவருக்கு பகிர்ந்தளிப்பு

திங்கட்கிழமை, 7 அக்டோபர் 2024      உலகம்
America 2024-10-07

Source: provided

வாஷிங்டன் : 2024-ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்கின் ஆகிய இருவருக்கும் பகிர்ந்து அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை ஆற்றியவர்களுக்கும் அமைதிக்காக பாடுபட்டவர்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.8.32 கோடி (10 லட்சம் டாலர்) ஆகியவை பரிசாக வழங்கப்படுகின்றன.

நிகழாண்டில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பை நோபல் அமைப்பு நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி, மைக்ரோஆர்என்ஏ-வை கண்டுபிடித்ததற்காக அமெரிக்காவின் விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்கின் ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, இயற்பியலுக்கான நோபல் பரிசு செவ்வாய்க்கிழமையும் (அக்.3), தொடர்ந்து வேதியியல், இலக்கியத் துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கான நோபல் பரிசுகள் அடுத்தடுத்த நாள்களிலும் அறிவிக்கப்படவுள்ளன.

கடந்த 1901-ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வரும் நோபல் பரிசை நிறுவியவர் ஸ்வீடனைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல். வேதியியல், பொறியியலில் நிபுணரான இவர், டைனமைட் வெடிபொருளைக் கண்டுபிடித்தார். தனது கண்டுபிடிப்பின் மூலம் பெரும் செல்வந்தரான இவர் அறிவியல் கண்டுபிடிப்புகளை கெளரவிக்கும் வகையில் நோபல் பரிசை நிறுவினார். அவரது நினைவுதினமான டிசம்பர் 10-ம் தேதி பரிசு வழங்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து