முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் பாக்கெட் சாராயம் விற்க தடை விதித்தது கலால்துறை

வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2024      இந்தியா
Pondy 2024-10-18

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரியில் பாக்கெட் சாராயம் விற்க தடை விதித்து கலால்துறை   உத்தரவு பிறப்பித்துள்ளது. 

புதுச்சேரியில் 85 சாராயக் கடைகளும், காரைக்காலில் 25 சாராயக் கடைகளும் உள்ளன. இந்த சாராயக் கடைகளில் பாக்கெட் சாராயம் விற்பனை செய்ய அனுமதி கேட்டிருந்தனர். இதையடுத்து ஆகஸ்ட் 7-ம் தேதி பாக்கெட் சாராயம் விற்க கலால்துறை அனுமதி வழங்கியிருந்தது. இதனால் சாராய கடைகளில் பாக்கெட் சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில்,புதுச்சேரி, காரைக்காலில் பாக்கெட் சாராய விற்பனைக்கு கலால்துறை தடை விதித்துள்ளது. இது தொடர்பாக புதுவை அரசு அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கலால்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, 

புதுச்சேரியில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் சாராய பாக்கெட்டுகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி புதுவை அரசு அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் உத்தரவின்படி புதுச்சேரி, காரைக்காலில் மீண்டும் பாக்கெட் சாராயம் விற்பனைக்கு தடை விதித்து கலால் துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருளுக்கு தடை விதிக்கப்பட்டதால் பாக்கெட் சாராய அனுமதி வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து