முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

36 வருடங்களுக்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் நியூசி., அணி வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2024      விளையாட்டு
New-Zealand 2024-05-14

Source: provided

பெங்களூரு : 36 வருடங்களுக்கு பிறகு இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான வெற்றியை பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னர் 1988ஆம் ஆண்டு நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு எதிராக வெற்றிப் பெற்றிருந்தது. இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.

46 ரன்களுக்கு அவுட்....

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது. 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

107 ரன்கள் இலக்கு... 

தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 402 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா 134 ரன், கான்வே 91 ரன், டிம் சவுதி 65 ரன் எடுத்தனர். இதையடுத்து 366 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 462 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அபாரமாக ஆடிய சர்பராஸ் கான் 150 ரன்னிலும், ரிஷப் பண்ட் 99 ரன்னிலும் அவுட் ஆகினர். இதன் காரணமாக 107 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.ஜஸ்ப்ரீத் பும்ரா 4 பந்துகள் வீசிய நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக நேற்று 4ம் நாள் ஆட்டம் முடிக்கப்பட்டது.

மழை காரணமாக... 

5வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கியது . தொடக்கத்தில் டாம் லாதம் ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்துவீச்ச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் டெவான் கான்வே 17 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வில் ய்ங் , ரச்சின் ரவீந்திரா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர் . இதனால் நியூசிலாந்து அணி 27.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்க்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

36 வருடங்களுக்கு...

36 வருடங்களுக்கு பிறகு இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான வெற்றியை பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னர் 1988ஆம் ஆண்டு நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு எதிராக வெற்றிப் பெற்றிருந்தது. இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.2வது டெஸ்ட் வரும் 26ம் தேதி தொடங்க உள்ளது. 

டோனியை சமன் செய்த ரோகித்

முதல் போட்டியில் தோல்வி கண்டதன் மூலம் சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் போட்டிகளில் தோல்வி கண்ட இந்திய கேப்டன்கள் பட்டியலில் விராட் கோலியை (2 தோல்வி) முந்தி டோனி, கங்குலி, சச்சினை ரோகித் சர்மா (தலா 3 தோல்விகள்) சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் பட்டோடி ( 9 தோல்வி) உள்ளார். அதற்கு அடுத்த படியாக 2வது இடத்தில் கபில் தேவ் மற்றும் முகமது அசாரூதின் ( 4 தோல்வி) ஆகியோர் உள்ளனர். 3வது இடத்தில் ரோகித் சர்மா, பிஷன் பேடி, எம்.எஸ். டோனி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி (3 தோல்வி) ஆகியோர் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து