முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை: தொடர்ந்து முதலிடத்தில் இந்தியா

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2024      விளையாட்டு
India-test-cricker--2024-09

Source: provided

துபாய் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தபோதிலும், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

36 ஆண்டுகளுக்கு... 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

வெற்றி சதவிகிதம்... 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தபோதிலும், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இந்திய அணியின் வெற்றி சதவிகிதம் 68.06 ஆக குறைந்துள்ளது. இருப்பினும், இந்திய அணி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. அதேவேளையில், இந்தியாவை வீழ்த்தியதன் மூலம், நியூசிலாந்து அணி 6-வது இடத்திலிருந்து 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

2-வது இடத்தில்...

62.50 சதவிகித வெற்றிகளுடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்திலும், 55.56 சதவிகித வெற்றிகளுடன் இலங்கை அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகியவை முறையே 5,6 மற்றும் 7-வது இடங்களில் உள்ளனர். பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் 8 மற்றும் 9-வது இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து