முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் தொடர்ந்து மோசமாகும் காற்றின் தரம்

வியாழக்கிழமை, 24 அக்டோபர் 2024      இந்தியா
Delhi 2024-10-19

Source: provided

புதுடெல்லி: டெல்லியில் தொடர்ந்து காற்றின் தரம் மோசமாகி வருகிறது.

தலைநகர் டெல்லியில் குளிர்காலம் தொடங்கியது முதலே காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் காற்றின் தரம் இப்படித்தான் மோசமடையும். இந்நிலையில், டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் காற்று தரக் குறியீடு (AQI) 328 ஆக பதிவாகியுள்ளது. காற்றின் தரம் 'மிக மோசமான' பிரிவில் இருந்ததால், டெல்லியில் நேற்று காலை புகை மூட்டமாக காணப்பட்டது.

துவாரகா, ரோகினி, டெல்லி விமான நிலையம், முண்ட்கா, நரேலா, பட்பர்கஞ்ச், ஷாதிபூர், சோனியா விஹார், வாசிர்பூர், அலிபூர், அசோக் விஹார், ஆயா நகர், புராரி, மந்திர் மார்க், ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம், நஜப்கர் மற்றும் நேரு நகர் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மிக மோசமான பிரிவில் பதிவாகியுள்ளது. டெல்லியில் மோசமடைந்து வரும் காற்றின் தரத்தால் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் சுவாச பிரச்சனையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து