முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. இடைத்தேர்தல்: காங்கிரஸ் கட்சி விலகல்

வியாழக்கிழமை, 24 அக்டோபர் 2024      இந்தியா
Congress 2023 01 25

Source: provided

லக்னோ: இன்டியா கூட்டணி கட்சியின் வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் தீவிர பிரசாரம் மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் 10 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் 9 தொகுதிகளுக்கு நவம்பர் 13-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. மில்கிபூர் சட்டசபை தேர்தலுக்கு தொடர்புடைய வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் அந்த தொகுதிக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

இந்தநிலையில் அம்மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே வெளியிட்டுள்ள அறிவிப்பில், உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தொகுதிகள் இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை. காங்கிரஸ் கட்சியினர் வேறு எந்த கட்சியின் சின்னத்திலும் போட்டியிடவும் மாட்டார்கள். இன்டியா கூட்டணியின் வேட்பாளர்களுக்காக காங்கிரஸ் கட்சி தீவிர பிரசாரம் மேற்கொள்ளும். இன்டியா கூட்டணி வேட்பாளர்களை எந்தவித நிபந்தனையின்றி ஆதரிக்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து