முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூடானில் துணை ராணுவ படையினர் நடத்திய தாக்குதலில் 50 பேர் பலி

சனிக்கிழமை, 26 அக்டோபர் 2024      உலகம்
Sudan 2024-10-26

Source: provided

கார்டோம் : சூடானில் துணை ராணுவப் படையினர் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சூடான் நாட்டில் அதிகாரங்களை கைப்பற்றும் நோக்கில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு காணப்பட்டது. துணை ராணுவ படைகளை, ராணுவத்துடன் இணைப்பது தொடர்பான இந்த மோதலில் சுமுக முடிவு ஏற்படவில்லை. 

இதன் தொடர்ச்சியாக அவ்வப்போது அந்நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே மோதல் வெடித்து வருகிறது. இந்நிலையில், மத்திய சூடானின் அல் கம்லின் பகுதியில் உள்ள அல்செரிஹா கிராமத்தின் மீது அதிக அளவில் துணை ராணுவப்படையினர் தாக்குதல் நடத்தினர். 

இந்த தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட குடிமக்கள் உயிரிழந்தனர் மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று அரசு சாரா குழுக்கள் தெரிவித்துள்ளன. நேற்று முன்தினம் காலை துணை ராணுவப் படையினர் அல் கம்லின் பகுதியின் அல்செரிஹா கிராமத்தின் மீது அதிக அளவில் துப்பாக்கி சூடு மற்றும் ஷெல் குண்டுகளை வீசினர் என்று கெசிரா மாநிலத்தின் தலைநகரான வாட் மதனியில் உள்ள ஒரு தன்னார்வல குழுவான எதிர்ப்புக்குழு தெரிவித்துள்ளது. 

மேலும் அல்செரிஹா கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடிமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 21 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 22 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 23 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 23 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 22 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 22 hours ago
View all comments

வாசகர் கருத்து