முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

35 மில்லியன் டாலர்களுக்கு மேன்சன்: தனது குழந்தைகளுக்காக வாங்கிய எலான் மஸ்க்

புதன்கிழமை, 30 அக்டோபர் 2024      உலகம்
Elon-Musk 2023 03 28

Source: provided

வாஷிங்டன் : டெக்ஸாசில் எலான் மஸ்க் தனது குழந்தைகளுக்காக   35 மில்லியன் டாலர்களுக்கு மேன்சன் ஒன்றை விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், நியூராலிங்க் மற்றும் டுவிட்டர்  வலைதளம் என பல்வேறு நிறுவனங்களை நிர்வகித்து வரும் எலான் மஸ்க்-க்கு குழந்தைகள் மீது தனி ஆர்வம் உண்டு. இதற்காக அவர் நிறைய குழந்தைகளை பெற்றெடுத்து வருகிறார். 

கடந்த 2002-ம் ஆண்டு முதல் தற்போது அவரை எலான் மஸ்கிற்கு 12 குழந்தைகள் உள்ளன. மேலும் இந்த குழந்தைகளுக்கு தனித்தனி தாய்மார்களும் உள்ளனர். இவர்களுக்காக எலான் மஸ்க் தற்போது 35 மில்லியன் டாலர்களுக்கு மேன்சன் ஒன்றை விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஆஸ்டின் என்ற இடத்தில் இந்த மேன்சன் உள்ளது. இந்த மேன்சன் 14 ஆயிரத்து 400 சதுர அடி பரப்பளவு கொண்டது. இதில் ஆறு படுக்கை அறைகள் உள்ளன. டெக்சாஸில் உள்ள எலான் மஸ்க் வீட்டில் இருந்து இந்த மேன்சன் பத்து நிமிடங்கள் தூரத்திலேயே அமைந்துள்ளது. 

எலான் மஸ்க் கடந்த 2002-ம் ஆண்டு ஜஸ்டைன் மஸ்க் உடன் முதல் குழந்தையை பெற்றுக் கொண்டார். ஜஸ்டைன் மஸ்க் குழந்தையை பெற்றெடுத்த பத்து வாரங்களில் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார்.

2008-ம் ஆண்டு இந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் செற்கை கருத்தரிப்பு மூலம் பிறந்தன. இதில் இரண்டு இரட்டை குழந்தைகளான க்ரிபின் மற்றும் விவியன் மற்றும் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகளான சக்சன், டமியன் மற்றும் கை ஆகியோர் அடங்குவர்.

இதைத் தொடர்ந்து பிரிடிஷ் நடிகையான டௌலா ரிலெயுடன் தொடர்பில் இருந்த எலான் மஸ்க், அவரை இரண்டு முறை திருமணம் செய்து பிறகு விவாகரத்து செய்தார். எனினும், இவர்களுக்கு குழந்தை எதுவும் பிறக்கவில்லை. 

2020 மற்றும் 2022-ம் ஆண்டு காலக்கட்டத்தில் மஸ்க்-க்கு கிரைம்ஸூடன் மூன்று குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளுக்கு எக்ஸ், எக்ஸ்ட்ரா டார்க் சிடரெல் மற்றும் டெக்னோ மெக்கானிகஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளன. தற்போது குழந்தைகளை வளர்ப்பது தொடர்பாக எலான் மஸ்க் மற்றும் கிரைம்ஸ் இடையே சட்டப்போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து