முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபர் தேர்தலில் யாருக்கு வெற்றி? தாய்லாந்து நீர்யானையின் கணிப்பு வீடியோ வைரல்

செவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2024      உலகம்
America-1 2024-11-05

பாங்காக், அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப், கமலா ஹாரிஸ் இருவரில் யார் வெற்றி பெறுவார் என்று தாய்லாந்து நீர்யானை கணித்துள்ள வீடியோ வைரலாகி இருக்கிறது.

உலக நாடுகள் உற்று பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல்  இந்திய நேரப்படி நேற்று மாலை 4.30 மணி முதல் மறுநாள் காலை 6.30 மணி வரை (அமெரிக்க நேரப்படி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு) ஒவ்வொரு மாகாணங்களாக வாக்குப்பதிவு நடந்தது. இந்திய நேரப்படி இன்று காலை 9.30 மணிக்குள் அனைத்து மாகாணங்களிலும் ஓட்டுப்பதிவு முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தலில் யாருக்கு வெற்றி என்பது பற்றி நாள்தோறும் புதுப்புது யூகங்களும், கணிப்புகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதில் லேட்டஸ்ட்டாக தாய்லாந்து நீர்யானை தந்துள்ள கணிப்பு தான் அனைவர் மத்தியிலும் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

அது பற்றிய விவரம் வருமாறு:

தாய்லாந்தில் ஜோன்புரி பகுதியில் இருக்கும் கா கேவோவ் என்ற திறந்தவெளி உயிரியல் பூங்காவில் மூ டெங் என்று பெயரிடப்பட்ட குட்டி நீர்யானை உள்ளது. அந்த பெண் யானையானது, அமெரிக்க தேர்தலில் டொனால்டு டிரம்ப் தான் வெற்றி பெறுவார் என்று கணித்துள்ளது. 

கணிப்புக்காக, குட்டி நீர்யானை முன்பாக இரண்டு தர்பூசணி பழங்கள் வைக்கப்பட்டது. ஒரு பழத்தில் தாய் மொழியில் (தாய்லாந்தின் உள்ளுர் மொழி தாய்) டொனால்டு டிரம்ப் பெயரும், மற்றொரு பழத்தில் கமலா ஹாரிஸ் பெயரும் எழுதி வைக்கப்பட்டு இருந்தது.

அந்த பழங்களில் டிரம்ப் பெயர் எழுதியிருந்த பழத்தை குட்டி நீர் யானை சாப்பிட்டது. அருகில் இருந்த மற்றொரு பெரிய நீர்யானை, கமலா ஹாரிஸ் என்ற பெயர் கொண்ட பழத்தைச் சாப்பிட்டது. இதன் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கே வெற்றி என்று மூ டெங் கணித்துள்ளதாக உயிரியல் பூங்கா ஊழியர்கள் கூறுகின்றனர். குட்டி நீர் யானையின் இந்த கணிப்பு வீடியோ இப்போது உலகமெங்கும் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து