முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மீனவர்கள் மேலும் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2024      தமிழகம்
Fishermen 2024-03-29

Source: provided

நாகை : தமிழக மீனவர்கள் மேலும் 12 பேர் நேற்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 10-ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று  நாகப்பட்டினம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 10-ம் தேதி டாடா நகரைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் செல்வநாதன் (40 ) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவர் உட்பட 12 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். 

அவர்கள் நேற்று அதிகாலை 4 மணியளவில் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி அவர்களை படகுடன் சிறைப்பிடித்து அழைத்துச் சென்றனர்.

அக்கரைப்பேட்டை டாடா நகரைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன்கள் செல்வநாதன் (40), விஜயநாதன் (37), கண்ணன் மகன் சதன் (26), பழனியாண்டி மகன் ஆறுமுகம் (51) திடீர் குப்பத்தைச் சேர்ந்த காத்தான் மகன் குழந்தைவேல் (57), ராஜதுரை மகன் பாக்கியராஜ் (43), தமிழ் தான் பேட்டை சாமந்தான் பேட்டை பெருமசாமி மகன் செந்தில், ஆனந்தவேல், மாதவன், நாகூர் மாரியப்பன் மகன் இனியவன் (30), கூழையார் சரவணன் (41) ஆகிய 12 பேரையும் கைது செய்துள்ள இலங்கை கடற்படையினர் அவர்களை இலங்கைக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.  விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

கடந்த சில நாட்களில் 35 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து