முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்: தூத்துக்குடியில் துணை முதல்வர் உதயநிதி பேச்சு

வியாழக்கிழமை, 14 நவம்பர் 2024      தமிழகம்
Udayanidhi-1 2023-10-15

தூத்துக்குடி, தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார். 

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் தங்கப் பாண்டியன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு லட்சுமணன் – அக்ஷய மணமக்களை வாழ்த்தினார். பின்னர் விழாவில்  அவர் பேசியதாவது, 

சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியது தி.மு.க ஆட்சி . பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது தி.மு.க ஆட்சி தான். மகளிர் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்ய ஏராளமான திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தந்து கொண்டிருக்கிறார். 

தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். தி.மு.க. இல்லாவிடில் தமிழர்களின் வீட்டு திருமணத்தை தமிழில் நடத்துகிற உரிமை கூட இல்லாமல் போயிருக்கும். இவ்வாறு அவர் பேசினார். 

தொடர்ந்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட சார்பு அணி நிர்வாகிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஆலோசனை நடத்தினார். அப்போது பேசுகையில், 

சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி இலக்குடன் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். திராவிட மாடல் அரசின் சாதனை திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். மாதம் ஒருமுறையாவது மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் அளவில் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்த வேண்டும்.  பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அரசின் திட்டங்களை எடுத்துக்கூற வேண்டும் என்று தெரிவித்தார். 

இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பட்டா விண்ணப்பங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு துணை முதல்வர் அறிவுறுத்தினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து