முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுடன் வருபவர்களுக்கு டேக் அறிமுகப்படுத்த முடிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

வியாழக்கிழமை, 14 நவம்பர் 2024      தமிழகம்
Ma Subramani-2023-11-09

சென்னை, நோயாளிகளுடன் வருபவர்களுக்கு சிவப்பு, மஞ்சள், பச்சை, நீல வண்ண டேக் அறிமுகப்படுத்தப்படும் என்று மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, 

கிண்டி மருத்துவமனையில் இளைஞரின் தாக்குதலில் காயம் அடைந்த மருத்துவர் பாலாஜி நலமுடன் உள்ளார். சாதாரண உணவுகளை எடுத்துக் கொள்ளும் அளவு காலையில் உடல் நலம் முன்னேற்றம் அடைந்துள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் பாலாஜி இன்னும் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பார்.  இதய பாதிப்பு அவருக்கு உள்ளதால் இதயவியல் சிறப்பு மருத்துவக் குழுவும் சிகிச்சை அளித்து வருகிறது. மருத்துவருக்கு பொருத்தப்பட்ட பேஸ்மேக்கரின் செயல்பாடு குறித்து கேட்டறியப்பட்டது.

மதியத்திற்கு பிறகு மருத்துவர் பாலாஜி, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்படுவார். மருத்துவர் பாலாஜியை தாக்கிய விக்னேஷ் மீது 7 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க உரிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 

நோயாளியுடன் வருவோருக்கு டேக் பயன்பாடு சோதனை முறையில் நடைமுறையில் உள்ளது. 36 மருத்துவக் கல்லூரி, 37 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் படிப்படியாக டேக் அறிமுகம் செய்யப்படும். பொது மருத்துவப்பிரிவுக்கு வருவோருக்கு நீலநிற டேக் பொருத்தப்படும். 

சிவப்பு நிறம் தீவிர சிகிச்சை பிரிவு, மஞ்சள் நிறம் சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவு, பச்சை நிறம் சிறப்பு அறுவை சிகிச்சை பிரிவு என் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சி.சி.டி.வி. செயல்படுவதை உறுதி செய்ய அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம்.

மருத்துமனை ஒப்பந்த பணியாளர் வருகை பதிவேட்டை பயோமெட்ரிக்கில் பதிவு செய்ய அறிவுரை வழங்கியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து