முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து

வியாழக்கிழமை, 14 நவம்பர் 2024      தமிழகம்
Anbil 1

சென்னை, நாளைய உலகின் சிற்பிகளாகிய குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஜவஹர்லால் நேரு குழந்தைகள் மீது வைத்திருந்த அலாதி அன்பும், இன்றைய குழந்தைகள் நாளையே எதிர்காலம் என்ற அவரின் கருத்துகளை அங்கீகரிக்கும் விதமாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் குழந்தைகள் தினத்தையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

நாளைய உலகின் சிற்பிகளாகிய குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள்.  பிள்ளை சிரிக்கையில் சிரித்தது வையம்! சிரித்தது வானமே என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். நம் குழந்தைகளின் மகிழ்ச்சிதான் நம்மை இயக்குகிறது. அத்தகைய குழந்தைகளின் கல்வியோடு சேர்த்து அவர்களின் தனித்திறமைகளையும் போற்றி வளர்ப்போம். குழந்தைகளைக் கொண்டாடுவோம். இவ்வாறு அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து