முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயங்கொண்டம் அருகே ரூ.1000 கோடி மதிப்பில் காலணி உற்பத்தி தொழிற்சாலை: முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்

வியாழக்கிழமை, 14 நவம்பர் 2024      தமிழகம்
Stalin 2021 11 29

திருச்சி, ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரத்தில் 130 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் சிப்காட் தொழில் வளாகத்தில், தைவான் நாட்டை சேர்ந்த டீன் ஷூஸ் குழுமம் ரூ.1,000 கோடி முதலீட்டில் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

முதல்வர்  மு.க.ஸ்டாலின்,  அரசின் வளர்ச்சி பணிகள் குறித்து  மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து, நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி கடந்த 5, 6-ம் தேதிகளில் கோவை மாவட்டத்தில் கள ஆய்வை தொடங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 9,10-ம் தேதிகளில் விருதுநகரில் கள ஆய்வு செய்தார். 

இதன் தொடர்ச்சியாக அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் நலத்திட்டங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கள ஆய்வு மேற்கொள்கிறார். இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் திருச்சி விமான நிலையம் சென்று  பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பொதுப்பணித்துறை பயணியர் விடுதிக்கு சென்று இரவு தங்கி ஓய்வு எடுக்கிறார்.

இன்று காலை 9.30 மணியளவில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரத்தில் 130 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் சிப்காட் தொழில் வளாகத்தில், தைவான் நாட்டை சேர்ந்த டீன் ஷூஸ் குழுமம் ரூ.1,000 கோடி முதலீட்டில் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

அதனை தொடர்ந்து அவர் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட வாரணவாசி கிராமத்தில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தமிழக அரசின் ஊட்டச்சத்து உறுதி திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைக்கிறார். 

இந்த திட்டம் ஏற்கனவே கடந்த 2022-ம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள பிறந்தது முதல் 6 மாதம் வரையிலான குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்குவதோடு மட்டுமல்லாமல், குழந்தைகளின் நிலையை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் 2-ம் கட்டம் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகம்  முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. இதை தொடர்ந்து காலை 11.15 மணியளவில் அரியலூர் - செந்துறை சாலையில் கொல்லாபுரத்தில் நடைபெறும் அரசு விழாவில் அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 26 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 

தொடர்ந்து , 51 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும் 10,141 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.இதே விழாவில் பெரம்பலூர் மாவட்டத்தில் 27 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து, 456 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். 

மேலும் 11,721 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் சிறப்புரையாற்றுகிறார். பின்னர் மதியம் 12.50 மணிக்கு பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்திற்கு வந்து மதிய உணவு சாப்பிடுகிறார். பின்னர் சற்று நேரம் அங்கு ஓய்வெடுக்கிறார். 

அதன் பின்னர் மாலை 4.30 மணியளவில் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே அரியலூர் சாலையில் உள்ள பூமணம் திருமண மஹாலில் நடைபெறும் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். அப்போது அவர், 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து பெரம்பலூர் - அரியலூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்குகிறார். 

கூட்டம் முடிந்ததும் மாலை 6 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு இரவு 6.55 மணிக்கு சென்று அங்கிருந்து இரவு 7.55 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்கு  செல்கிறார்.

அரியலூர், பெரம்பலூர் மாவட்ட அரசு நிகழ்ச்சிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் செய்து வருகின்றன. பெரம்பலூரில் முதலமைச்சர் வரவேற்பு மற்றும் கட்சி கூட்ட ஏற்பாடுகளை முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எம்.பி. தலைமையில் கட்சியினர் செய்து வருகின்றனர். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி அரியலூர் - பெரம்பலூர் மாவட்டங்களில் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு அவர் பயணம் செய்யும் சாலைகளில் பாதுகாப்பு கருதி நேற்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இன்று (வெள்ளிக்கிழமை) அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்து சென்னை செல்ல உள்ளதால் அன்றும் டிரோன்கள் இயக்கத்திற்கும் மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டு உள்ளது. முதல்வரின் வருகையால் தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளன. அவர் பங்கேற்கும் விழா நடைபெறும் இடங்கள், அவர் செல்லும் வழிகளிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து