முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

வியாழக்கிழமை, 14 நவம்பர் 2024      தமிழகம்
Edappadi 2020 11-16

கிருஷ்ணகிரி, நான் கூட்டணிக்கு வருமாறு வேண்டுகோள் விடுப்பது மற்ற கட்சிகளுக்கு தான். பா.ஜ.க. வுக்கு அல்ல என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரியில் நிருபர்களை சந்தித்த அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, 

 வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வோடு கூட்டணி இல்லை என்பதை பல இடங்களில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறேன். மீண்டும் மீண்டும் இந்த கேள்வியை கேட்க வேண்டாம். எங்களுக்கு மக்கள் விரோத தி.மு.க., அரசு அகற்றப்பட வேண்டும். 

பா.ஜ.க. வுடன் அ.தி.மு.க., கூட்டணி இல்லை. நான் கூட்டணிக்கு வருமாறு வேண்டுகோள் விடுப்பது மற்றக் கட்சிகளுக்கு தான். ஏற்கனவே லோக்சபா தேர்தலில் தெளிவுபடுத்தி விட்டோம். வரும் சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவுபடுத்தி விட்டோம். இதனை தவிர்த்து தான் பேசி கொண்டு இருக்கிறோம்.

தேர்தல் முடிந்த பிறகு தான், யார், யாருக்கு மக்கள் ஓட்டளித்துள்ளனர் என்பது தெரியவரும். இது மறைமுக ஓட்டு தான். நேரடி ஓட்டு கிடையாது. அ.தி.மு.க.,வை பொறுத்தவரைக்கும் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் செல்வாக்கு உடைய ஒரே கட்சி அ.தி.மு.க.

இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குவதற்கு அ.தி.மு.க., ஆட்சி தான் காரணம். அ.தி.மு.க., ஆட்சியில் நிறைய திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.  அ.தி.மு.க., அரசை மக்கள் எப்படி புறக்கணிப்பார்கள். யார் சேவை செய்கிறார்கள் என்பது மக்களுக்கு தெளிவாக தெரியும்.

அ.தி.மு.க., மக்கள் செல்வாக்கு நிறைந்த கட்சி என்பதை பலமுறை நிரூபித்து காட்டியுள்ளோம். ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒன்றிணைத்து 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு அ.தி.மு.க., மெகா கூட்டணி அமைக்கும். 

அ.தி.மு.க., மெகா கூட்டணியில் பா.ஜ.க. இருக்காது. மக்களை குழப்பி ஆதாயம் தேட முதல்வர் ஸ்டாலின் முயற்சி செய்கிறார். மக்களுக்கு தி.மு.க., அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. திட்டங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி  கூறினார்.

நடிகர் விஜய் கட்சி துவங்கியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அ.தி.மு.க., பலமான தொண்டர்களைக் கொண்ட கட்சி . அது எப்போதும் நெருக்கடியை சந்திக்காது. கடந்த 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை விட தற்போது லோக்சபா தேர்தலில் அதிக ஓட்டுக்களை அ.தி.மு.க., பெற்றுள்ளது. 

விஜய் கட்சி துவங்கி உள்ளதால் அ.தி.மு.க.,வுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதே போல தி.மு.க., அதன் ஓட்டு சதவீதத்தை இழந்துள்ளது. இதுதான் உண்மை என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து