முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடிநீர் கட்டணங்களுக்கு பசுமை வரி: கர்நாடக அரசு புதிய திட்டம்

வியாழக்கிழமை, 14 நவம்பர் 2024      இந்தியா
Karnataka-Assembly

பெங்களூரூ, ஆறுகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக குடிநீர் கட்டணங்களுடன் பசுமை வரியை விதிக்க கர்நாடக வனத்துறை முடிவு செய்துள்ளது. 

இது குறித்து வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே கூறியதாவது, 

கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் துங்கா, பத்ரா, காவேரி, கபினி, ஹேமாவதி, கிருஷ்ணா, மலபிரபா, ஹட்டபிரபா உள்ளிட்ட ஆறுகள் பாய்ந்தோடுகின்றன. இந்த ஆறுகள், அம்மாநிலத்தின் பல்வேறு நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளின் நீராதாரமாக திகழ்ந்து வருகின்றன.

இந்த நிலையில், இந்த ஆறுகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக, குடிநீர் கட்டணங்களுடன் பசுமை வரியை விதிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஒரு வாரத்திற்குள் முன்மொழிவை தயார் செய்யும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

 இந்த ஆறுகளின் மூலம் பயனடையும் பகுதிகளில் குடிநீர் கட்டணங்களுடன் பசுமை வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்டணத்துடன் ரூ. 2 முதல் ரூ. 3 வரை கூடுதலாக செலுத்துவதன் மூலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். 

இந்த நிதி வேறு எந்தத் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட மாட்டாது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காகவும், வனங்களின் மேம்பாடு மற்றும் மரங்கள் நடுவதற்கும், விலங்குகளின் வலசை பாதைகளை உருவாக்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து