முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷிப்ட் முறை தேர்வு அறிவிப்புக்கு எதிர்ப்பு: உ.பி. அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு எதிராக தொடரும் மாணவர்கள் போராட்டம்:

வியாழக்கிழமை, 14 நவம்பர் 2024      இந்தியா
UP-Students-2024-11-14

 லக்னோ, ஷிப்ட் முறை தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப்பிரதேசத்தில் அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு மாணவர்களின் போராட்டம் 4-வது நாளாக தொடர்கிறது. 

 உத்தரப் பிரதேச அரசு அலுவலகங்களில் காலி பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு, பிராந்திய குடிமை பணித்தேர்வுகள் டிசம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்வு மூன்று ஷிப்டுகளாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தேர்வுகளை ஒரே நாளில் ஒரே ஷிப்ட்டில் நடத்த வலியுறுத்தி நான்காவது நாளாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், பிரயாக்ராஜில் உள்ள அரசு பணியாளர் தேர்வாணையம் அலுவலகம் முன்பு திரண்ட மாணவர்கள் போலீசாரின் தடுப்புகளை தாண்டி சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. 

மாகாண சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வையும், ஆர்.ஓ.ஏ.ஆர்.ஓ. ஆகிய பதிவிகளுக்கான தேர்வையும் ஒரே நாளில் ஒரே ஷிப்ட்டில் நடத்த வேண்டும் என்றும் மாணவர்கள் முழக்கமிட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை காவல் துறையினர் இழுத்து சென்றனர். வன்முறையில் ஈடுபட்டதாக 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே மாணவர்களின் போராட்டத்திற்கு தீர்வு காண்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வருமாறு துணை முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். மாணவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து ஒரே ஷிப்ட்டில் தேர்வு நடத்த வேண்டும் என சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து