முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டப்பேரவை தேர்தல்: மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் பிரசாரம் நிறைவு

திங்கட்கிழமை, 18 நவம்பர் 2024      இந்தியா
Maharashtra-1 2024-11-18

Source: provided

டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில 2-வது கட்ட சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இரு மாநிலங்களிலும் நவம்பர் 20-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில் இறுதி கட்ட பிராசாரத்தில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். 

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 தொகுதிகள். இதில் 43 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 13-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. எஞ்சிய 38 சட்டசபை தொகுதிகளுக்கு நாளை (நவம்பர் 20-ம்) தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

முதல்வர் ஹேமந்த் சோரன் (பார்ஹெய்த் தொகுதி), முன்னாள் முதல்வர் சாம்பாய் சோரன் ( சரெய்கேலா), பாபுலால் மராண்டி (தன்வார்), சீதா சோரன் (ஜம்தாரா),கல்பனா சோரன் (காண்டே), ராமேஸ்வரம் ஓரான் (லோகர் தாகா), பசந்த் சோரன் (தும்கா), கீதா கோடா (ஜகநாத்பூர்), சுனில் சோரன் (தும்கா) ஆகியோர் ஜார்க்கண்ட் மாநில 2-வது கட்ட தேர்தலில் களம் காணும் விஐபி வேட்பாளர்கள். 38 தொகுதிகளில் மொத்தம் 528 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ்- ஆர்ஜேடியை உள்ளடக்கிய இன்டியா கூட்டணி மற்றும் பாஜக, ஜேடியூ உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை (நவம்பர் 20-ம் தேதி) வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஆளும் மகாயுதி கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாட்டி இடையே இம்மாநிலத்தில் கடும் போட்டி நிலவுகிறது. மகாயுதி கூட்டணியில் பாஜக 149, ஏக்நாத் ஷிண்டே சிவசேனா 81, அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 59 இடங்களில் போட்டியிடுகின்றன. 

மகா விகாஸ் அகாடியில் காங்கிரஸ் 101 தொகுதிகளில் போட்டியிடுகிறது. உத்தவ் தாக்கரே சிவசேனா 95, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் 86 இடங்களில் களம் காண்கின்றன. 237 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடுகிறது. பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாடி கூட்டணி 200 இடங்களிலும் ராஜ்தாக்கரேவின் நவநிர்மாண் சேனா தனித்து 125 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

மகாராஷ்டிராவின் 288 தொகுதிகளில் 158 அரசியல் கட்சிகளின் 2,050 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு சமமாக 2,086 சுயேட்சைகள் போட்டியிடுகின்றனர். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 288 தொகுதிகளில் 4,136 பேர் வேட்பாளர்களாக களம் காண்கின்ற்னர். மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் இரு மாநிலங்களிலும் நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. முன்னதாக அனைத்து கூட்டணிகளின் தலைவர்களும் நேற்று இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து