முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் காற்று மாசுபாடு எதிரொலி: அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவு

புதன்கிழமை, 20 நவம்பர் 2024      இந்தியா
Delhi 2024-11-18

புது டெல்லி, டெல்லியில் காற்று மாசுபாடு எதிரொலியாக அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அரசு உத்தரவிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. அதனால் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டிலும் நேற்று முன்தினம் காற்று மாசு பிரச்சினை எழுப்பப்பட்டது.

தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு கூடியவுடன், சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேசன் தலைவர் கபில் சிபல் உள்ளிட்ட வக்கீல்கள், டெல்லியில் காற்று மாசு அதிகமாகி வருவதால், அதை கையாள உடனடி நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

இந்த சூழலில் டெல்லி காற்று மாசுபாடு கடுமையாக இருப்பதால் வீட்டில் இருந்தே வேலை, ஒற்றைப்படை, இரட்டைப்படை எண்கள் அடிப்படையில் வாகன இயக்கம் உள்ளிட்ட திட்டங்களை அமல்படுத்துவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காற்றின் தரக்குறியீடு தொடர்ந்து 450-க்கும் மேல் உள்ளது. இது காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதை காட்டுகிறது. காற்று மாசு கடுமையாக இருப்பதால் அடர்ந்த புகை மூட்டம் நிலவுகிறது. பனிப் பொழிவும் அதிகமாக இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் காற்று மாசுபாடு எதிரொலியாக 50 சதவீத அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவிடப்படுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து