எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : வடகிழக்கு மாநிலங்களையும், மக்களையும் காங்கிரஸ் கட்சி அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதாக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.
மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இதனிடையே, மணிப்பூர் விவகாரத்தில் தலையிடுமாறு ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில்,
மணிப்பூரில் மக்களின் பாதுகாப்பையும், சட்டம் ஒழுங்கையும் பாதுகாக்க அம்மாநில அரசும், மத்திய அரசும் தவறிவிட்டது. அங்கு மக்கள் கண்ணியத்துடனும், அமைதியாக வாழ்வதையும் உறுதி செய்ய ஜனாதிபதி தலையிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், கார்கேவின் கடிதத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
கடந்த பார்லிமென்ட் கூட்டத்தில் மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்கும் போது, அவையில் இருந்து வெளிநடப்பு செய்ததே, காங்கிரஸ் கட்சியினர் மரியாதை குறைவாகவும், பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதற்கு சாட்சியாகும்.
ஜனாதிபதி குறித்து பல்வேறு விமர்சனங்களை செய்து விட்டு, தற்போது அவருக்கே நீங்கள் கடிதம் எழுதியிருப்பது என்னை வியக்க வைத்துள்ளது. ஜனாதிபதிக்கு காங்கிரஸ் கட்சியினர் மரியாதை கொடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
தற்போது, உங்களின் பொய்யான, அரசியல் நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, தவறான உத்திகள் மற்றும் அரசு இயந்திரங்களின் தோல்வியால், இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருப்பதை உங்கள் கட்சியினர் மறந்து விட்டார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்பு, பொருளாதாரம், சுகாதாரம், கல்வியில் வளர்ச்சியடைந்திருக்கிறது. துப்பாக்கிச்சூடு, வெடிகுண்டு தாக்குதல் என எப்போதும் நிகழ்ந்து கொண்டிருந்த வடகிழக்கு மாநிலங்களில் தற்போது, அமைதி, வளர்ச்சி பாதையில், சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக திரும்பியுள்ளது.
மணிப்பூரில் மட்டும் கடந்த 2013-ம் தேதி 20 சதவீதமாக இருந்த வறுமை, கடந்த 2022ல் 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சியை இப்போதும் ஏற்றுக் கொள்ளாத நீங்களும், உங்கள் கட்சியினரும், வடகிழக்கு மாநிலங்களையும், மக்களையும் உங்களில் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துகிறீர்கள்.
1990 காலகட்டத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நிகழ்ந்த வன்முறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதை நினைவு படுத்த விரும்புகிறேன். அதே போல, 2011-ல் பிற மாநிலங்களைக் காட்டிலும் மணிப்பூரில் 4 முறை கேஸ் மற்றும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. இந்த பிரச்னைகளை தீர்க்க காங்கிரஸ் தவறி விட்டது.
ஆனால், தற்போது, மணிப்பூர் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மக்களை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் மத்திய அரசு முழுமூச்சாக செயல்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், மீண்டும், மீண்டும் மணிப்பூர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்வது தான் அதிர்ச்சியளிக்கிறது. இவ்வாறு அந்த கடிதத்தில் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
பெர்த் டெஸ்ட் முதல் இன்னிங்ஸ்: இந்திய அணி பந்துவீச்சில் ஆஸ்திரேலியா திணறல் : முதல் நாளில் 67 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது
22 Nov 2024பெர்த் : பெர்த் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி பந்துவீச்சில் ஆஸ்திரேலியா திணறி வருகிறது. முதல் நாளில் 67 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-11-2024.
22 Nov 2024 -
சர்வதேச கோர்ட்டின் முடிவு யூதர்களுக்கு விரோதமானது: நெதன்யாகு கண்டனம்
22 Nov 2024ஜெருசலேம் : சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் உட்பட 3 பேருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், இந்த முடிவானது யூதர்களுக்கு எதிரானது என்று நெதன்
-
கேரளாவில் இடைத்தேர்தல் நடந்த 3 தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை
22 Nov 2024திருவனந்தபுரம் : கேரளாவில் இடைத்தேர்தல் நடந்த வயநாடு பாராளுமன்ற தொகுதி மற்றும் செலக்கரா, பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. &nb
-
பட்டாபிராமில் புதிய டைடல் பூங்கா: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
22 Nov 2024சென்னை : திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் ரூ. 330 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய டைடல் பூங்காவினை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
அமைச்சர் பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு
22 Nov 2024சென்னை : அமைச்சர் பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
வட இந்தியாவில் நிலவும் காற்று மாசு தேசிய அவசர நிலை: ராகுல்
22 Nov 2024புதுடெல்லி : வட இந்தியாவில் நிலவும் காற்று மாசு தேசிய அவசரநிலை என்றும் தீர்க்கமான நடவடிக்கை தேவை எனவும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
உக்ரைனை தாக்கியது ஒரேஷ்னிக் என்ற புதிய ஏவுகணை: புடின்
22 Nov 2024மாஸ்கோ : அணு அல்லாத ஹைப்பர்சோனிக் கட்டமைப்பு கொண்ட புதிய ஒரேஷ்னிக் ஏவுகணை உக்ரைன் இலக்கை துல்லியமாக தாக்கியது வெற்றிகரமாக அமைந்தது என்று அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
-
தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவு
22 Nov 2024சென்னை : தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமப் புறங்களிலும் இன்று கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
-
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பிப்ரவரி மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு
22 Nov 2024திருமலை : திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பிப்ரவரி மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியிடப்படுகிறது.
-
மக்களை தேடி மருத்துவம்: 2 கோடியே ஒன்றாவது பயனாளிக்கு விழுப்புரத்தில் 29-ம் தேதி மருந்து பெட்டகம் வழங்குகிறார் முதல்வர்: தமிழ்நாடு அரசு தகவல்
22 Nov 2024சென்னை, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் 2 கோடியே ஒன்றாவது பயனாளிக்கு வரும் 29-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மருந்து பெட்டகத்தினை முதல்வர் மு.
-
ரஜினியை சந்தித்தது ஏன்? - நாம் தமிழர் சீமான் விளக்கம்
22 Nov 2024சென்னை : நடிகர் ரஜினியுடன் நாம் தமிழர் சீமான் நேற்றஉ சந்தித்து பேசினார். அரசியல், திரைப்படம் உள்ளிட்டவை குறித்து ரஜினியுடன் விவாதித்ததாக அவர் தெரிவித்தார்.
-
வரும் 2025-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
22 Nov 2024சென்னை : 2025-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
மாநாட்டிற்கு நிலம் கொடுத்தவர்களை இன்று கவுரவிக்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்
22 Nov 2024சென்னை : விக்கிரவாண்டியில் த.வெக. அரசியல் மாநாட்டிற்கு நிலம் கொடுத்தவர்களை விஜய் கவுரவிக்க உள்ளார்.
-
காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கத்தில் ரூ. 18.18 கோடியில் தொழில்நுட்ப மையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
22 Nov 2024சென்னை : குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் துல்லிய உற்பத்தி பெருங்குழுமத்தால் ம
-
கிழக்கு லெபனானில் இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் 47 பேர் பலி
22 Nov 2024பெய்ரூட் : கிழக்கு லெபனானில் இஸ்ரேல் படை நடத்திய வான்வழி தாக்குதலில் 47 பேர் பலியானார்கள்.
-
அதானி மீதான லஞ்ச புகாரால் இந்திய, அமெரிக்க உறவில் விரிசல் ஏற்படாது :வெள்ளை மாளிகை
22 Nov 2024வாஷிங்டன் : அதானி மீதான லஞ்ச புகாரால் இந்திய – அமெரிக்க இடையேயான உறவில் விரிசல் ஏற்படாது என்று வெள்ளை மாளிகை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
டெல்லி சட்டசபை தேர்தல்: கெஜ்ரிவால் அறிவித்த 6 முக்கிய வாக்குறுதிகள்
22 Nov 2024புதுடெல்லி : டெல்லி சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை நேற்று தொடங்கிய ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால், வரும் சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சியை வெ
-
சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்கண்டில் இன்று வாக்கு எண்ணிக்கை : இரு மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?
22 Nov 2024மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
-
நெசவுத்தொழில் தலைநிமிர நடவடிக்கை எடுக்க வேண்டும் : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
22 Nov 2024சென்னை : தமிழகத்தில் நெசவுத் தொழில் தலைநிமிர்ந்து நிற்பதற்குத் தேவையான நடவடிக்கைகளைஎடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
மக்களை தேடி மருத்துவம்: 2 கோடியாவது பயனாளிக்கு விழுப்புரத்தில் 29-ம் தேதி மருந்து பெட்டகம் வழங்குகிறார் முதல்வர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
22 Nov 2024சென்னை : மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் 2 கோடியாவது பயனாளிக்கு வரும் 29-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மருந்து பெட்டகத்தினை முதல்வர் மு.க.
-
நிஜ்ஜார் கொலை குறித்த ஊடக செய்திக்கு கனடா அரசு மறுப்பு
22 Nov 2024ஒட்டோவா : காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை பற்றி பிரதமர் மோடி அறிந்திருந்தார் என்று கனடா நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது அதிர்வலைகளை ஏற்படுத்த
-
மாநாட்டில் நடிகர் விஜய் பேச்சு: எஸ்.ஏ.சந்திரசேகர் புகழாரம்
22 Nov 2024சென்னை, தவெக மாநாட்டில் விஜய் பேசியதை பார்த்து என்னை அறியாமல் கை தட்டிவிட்டேன் என்று எஸ்.ஏ.சி சந்திரசேகர் கூறியுள்ளார்.
-
ஆசிரியையை கொலை செய்தது ஏன்? - காதலன் வாக்குமூலத்தால் பரபரப்பு
22 Nov 2024தஞ்சை : ஆசிரியை ரமணியை அவரது காதலன் மதன்குமார் பள்ளிக்குச் சென்று சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவத்தில், கொலை குறித்து அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள
-
ஷமி குறித்து பும்ரா பதில்
22 Nov 2024முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன் இரு அணிகளின் கேப்டன்களும் ஒன்றாக இணைந்து பார்டர் - கவாஸ்கர் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தனர்.