முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார் இங்கிலாந்து மன்னர்

ஞாயிற்றுக்கிழமை, 24 நவம்பர் 2024      உலகம்
Charles-Camilla 2024-11-24

Source: provided

லண்டன் : இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் விரைவில் இந்தியா வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

புற்று நோயிலிருந்து விடுபட்டு வரும் இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ், பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுவருகிறார். அந்த வகையில், மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் இந்தியாவுக்கு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே மன்னரும், ராணியும் இந்தியா வர திட்டமிட்டிருந்த நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணம் காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது. 

அப்போதே  பிரதமர்  மோடியும் மன்னர் மற்றும் ராணிக்கு இந்தியாவில் விருந்தளிக்க விருப்பம் தெரிவித்திருந்திருந்தார். இந்த நிலையில் மன்னர்  சார்லஸ் - ராணி கமிலா ஆகியோர் அரசு முறை பயணமாக விரைவில் மீண்டும் இந்தியா வருவதாக அந்த நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் இங்கிலாந்து அரச தம்பதியின் இந்த பயணத்தின் போது, அவர்கள் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்துக்கும் செல்வதாக அதில் கூறப்பட்டு உள்ளது. இதுதொடர்பான அந்த ஊடக செய்தியில், 

மன்னர் மற்றும் ராணியின் இந்திய துணைக் கண்ட சுற்றுப்பயண திட்டம் தயாராக உள்ளது. இது உலக அரங்கில் இங்கிலாந்துக்கு மிகப்பெரிய அரசியல் மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். 

மன்னர் மற்றும் ராணிக்கு இது போன்ற திட்டங்களை உருவாக்க முடிவது மிகவும் ஊக்கமளிக்கிறது. இது அவர்களுக்கு மிகவும் உற்சாகமாக உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து