முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் மசூதியில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல் : போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு

ஞாயிற்றுக்கிழமை, 24 நவம்பர் 2024      இந்தியா
UP 2024-11-24

Source: provided

லக்னோ : உ.பி. மாநிலம் சம்பல் பகுதியில் உள்ள மசூதியில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்களை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கலைந்து போக செய்தனர். 

உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பல் பகுதியில் ஷாஜி ஜமா மஸ்ஜித் என்ற மசூதி உள்ளது. மொகலாயர்களின் ஆட்சிக் காலத்தில் இந்து கோவிலை இடித்து இந்த மசூதியை கட்டியிருப்பதாக  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  

நீதிமன்ற உத்தரவின்பேரில் மசூதியை ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி இந்த குழுவினர் நேற்று காலையில் மசூதியை ஆய்வு செய்ய சென்றனர். பாதுகாப்புக்காக போலீசாரும் சென்றனர். 

அப்போது மசூதி அருகே நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து, மசூதியில் ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை கலைந்து செல்லும்படி போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டனர். 

ஆனால் தொடர்ந்து முழக்கமிட்ட போராட்டக்காரர்கள், வன்முறையில் ஈடுபட்டனர். அதிகாரிகள் மீது கற்களை வீசி தாக்கினர். வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இதனால் பதற்றம் உருவானது. 

இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் துப்பாக்கி சூடு நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர்.  அதன் பின்னர் நிலைமை கட்டுக்குள் வந்தது. அதிகாரிகள் மசூதிக்குள் சென்று ஆய்வு செய்தனர்.

கடந்த சில தினங்களாகவே அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் வன்முறை சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 5 நபர்களுக்கு மேல் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தடையை மீறி நேற்று வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 19-ம் தேதியும் பலத்த பாதுகாப்புடன் மசூதியில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது மசூதி நிர்வாக கமிட்டி உறுப்பினர்களும் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இது குறித்து காவல்துறை இயக்குநர் (டி.ஜி.பி) பிரசாந்த் குமார் கூறுகையில், 

நீதிமன்ற உத்தரவின்படி, சம்பாலில் உள்ள மசூதியில் இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. நேற்று காலையில் ஆய்வு நடத்த வந்த குழுவினர் மீது சில சமூக விரோதிகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். 

காவல் துறையினர் மற்றும் மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் தற்போது உள்ளனர். நிலைமை இப்போது கட்டுக்குள் உள்ளது. கற்களை வீசியவர்களை அடையளம் கண்டு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து