முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும்: அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 24 நவம்பர் 2024      இந்தியா
Rajnath 2024-11-24

Source: provided

புதுடெல்லி : அதானி விவகாரம் குறித்து பாராளுமன்ற கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்று டெல்லியில் நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டது. 

இன்று பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் டெல்லியில் பா.ஜ.க. மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடருக்கு முன்னதாக, பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தும் நோக்கில் மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை இந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. 

பாராளுமன்ற கட்டிடத்தில் உள்ள முதன்மைக் குழு அறையில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார்.  இந்த கூட்டத்தில் பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, மத்திய அமைச்சர் அனுப்பிரியா படேல் உள்ளிட்டோர் அரசு சார்பில் கலந்து கொண்டனர். 

காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரமோத் திவாரி, ஜெயராம் ரமேஷ், பிஜூ ஜனதா தள எம்.பி. சஸ்மித் பத்ரா, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டி, சமாஜ்வாடி கட்சி எம்.பி. ராம்கோபால் யாதவ், தெலுங்கு தேசம் கட்சியின் லவு ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

அப்போது, கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசு தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. கூட்டத்தொடரில் இடம்பெறும் விவாதங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். 

குறிப்பாக, அதானி மீது அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள லஞ்ச புகார் தொடர்பாக இந்த கூட்டத்தொடரில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. மணிப்பூர் பிரச்சினை, வட இந்தியாவில் நிலவும் காற்று மாசுபாடு மற்றும் ரயில் விபத்துகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது.  

.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. வக்பு சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட 16 மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பிரமோத் திவாரி, 

ரயில் விபத்துகள் அதிகரித்துள்ளன. ஜம்மு காஷ்மீரில் தினமும் தீவிரவாத செயல்கள் நடந்து வருகின்றன. தேசிய நலன் சார்ந்த பல விஷயங்களை முன்வைத்துள்ளோம். அதானி விவகாரத்துக்குப் பிறகு பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு கவலை அளிக்கிறது. 

நாங்கள் பிரச்சினைகளை எழுப்புவோம். பொருளாதாரத்தை பாதுகாப்பதில் எங்களது ஆர்வம் உள்ளது. ஒருமித்த கருத்து இருந்தால் விவாதம் நடத்த வேண்டும், இல்லையென்றால் சட்டப்படி ஆளுங்கட்சியுடன் கலந்தாலோசிப்போம் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து