முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜானகி ராமசந்திரன் நூற்றாண்டு விழா: உடன் பயணித்த திரை கலைஞர்களை கவுரவித்த எடப்பாடி பழனிசாமி

ஞாயிற்றுக்கிழமை, 24 நவம்பர் 2024      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : சென்னையில் நேற்று நடந்த முன்னாள் முதல்வர் ஜானகி ராமசந்திரனின் நூற்றாண்டு விழாவில்  அவருடன் பயணித்த திரை கலைஞர்களை அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி  கவுரவித்தார். 

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மனைவியும், தமிழகத்தின் முதல் பெண் முதல்வருமான ஜானகி ராமச்சந்திரனின்  நூற்றாண்டு விழா அ.தி.மு.க. சார்பில் நேற்று   சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. 

இந்த விழா நாதகான சிகாமணிகளான சகோதரர்கள் தி.ச. பாண்டியன் தி.ச. சேதுராம் குழுவினரின் மங்கள இசையுடன் தொடங்கியது. முன்னாள் அமைச்சர் பொன்னையன் வரவேற்று பேசினார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விழா மேடையில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த  எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் ஜானகி அம்மையாரின் உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.   

பின்னர் குத்து விளக்கு ஏற்றி வைத்து  ஜானகி அம்மையாரின்  உருவப்படத்தை திறந்து வைத்தார். இந்த படம் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட இருக்கிறது. 

இதன் தொடர்ச்சியாக நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு,  ஜானகி அம்மையாருடன் பயணித்த நடிகைகள் வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு, குட்டி பத்மினி, உள்ளிட்ட வர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

அ.தி.மு.க. வரலாறு மற்றும் ஜானகி அம்மையாரின்  வாழ்க்கை வரலாறுடன் இணைந்த குறும்படம் திரையிடப்பட்டது.  இதன் பின்னர்  சினிமா புகழ் அபிநயா நாட்டியக் குழுவினரின் வரவேற்பு நடனம் நடைபெற்றது. இந்த  நடனம் முடிந்ததும்  நடிகர் தம்பி ராமையா மேடையில் பேசினார்.

அதனை தொடர்ந்து நடந்த கவியரங்கில் , மக்கள் திலகத்தின் மனையரசி என்ற தலைப்பில் மரபின் மைந்தன் முத்தையா பேசினார். மனங்களை கவர்ந்த மாதரசி, என்ற தலைப்பில் திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் நந்தலாலா, மக்கள் தொண்டில் சிறந்த பேரரசி என்ற தலைப்பில் கவிஞர் ஆதிரா முல்லை ஆகியோரும் ஜானகி அம்மையாரின் பெருமைகளை பேசினார்கள். 

இதன் பிறகு  லட்சுமன் ஸ்ருதி குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஜானகி அம்மையார் கற்றுக் கொண்டது தாய்மைப் பாசமா? தலைமை பண்பா? என்ற தலைப்பில் பட்டிமன்றமும், சினிமா புகழ் நாட்டுப்புற இணையர் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி குழுவினரின் கிரா மிய இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

தொடர்ந்து திரையுலகினரின் வாழ்த்து காணொலி திரையிடப்பட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்தின் வாழ்த்து செய்தியும் இடம் பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர்.  பேசும் குறும்படம் திரையிடப்பட்டது. முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். 

முன்னதாக  ஸ்ரீவாரு மண்டப வளாகத்தில் நடைபெற்ற ஜானகி எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியையும் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.   இறுதியாக முன்னாள் அமைச்சர் வளர்மதி நன்றி கூறினார்.  

ஜானகி அம்மையார் நூற்றாண்டு விழாவையொட்டி  மண்டபத்தை சுற்றியுள்ள பகுதி விழாக்கோலம் பூண்டிருந்தது. அ.தி.முக் கொடிகள் கட்டப்பட்டு வாழை தோரணங்களால் சாலையின் இரு புறமும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. 

இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி வரவேற்று அழைத்துச் சென்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து