எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி: அரசியலமைப்புச் சட்டத்தை அரசியலாக்கக்கூடாது என்றும் அது எப்போதும் சமூக ஆவணமாகவே தொடர வேண்டும் என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தியுள்ளார். மேலும் கொள்கைகள் வேறானாலும் நம் அனைவருக்கும் நாடுதான் உயர்ந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம் இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஓம் பிர்லா, “அரசியலமைப்புச் சட்டம் நமது பலம். இது நமது சமூக ஆவணம். இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் காரணமாகவே சமூக, பொருளாதார மாற்றங்களைக் கொண்டுவந்து சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட, ஏழை, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மரியாதை அளித்துள்ளோம்.
அனைத்து வகுப்பினருக்கும், அனைத்து சாதியினருக்கும் எந்தப் பாகுபாடும் இல்லாமல் எப்படி வாக்குரிமையைப் பயன்படுத்தினோம் என்பது குறித்து நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். எனவே, நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உணர்வு, அனைவரையும் ஒன்றிணைத்து ஒன்றாகச் செயல்படுவதற்கான வலிமையை நமக்கு அளிக்கிறது. அரசியலமைப்பு அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
எந்தவொரு கட்சியும், எந்த ஒரு சித்தாந்தமும், எந்த ஒரு அரசாங்கமும் அரசியலமைப்பின் அடிப்படை உணர்வை அல்லது கட்டமைப்பை குறைக்க முடியாது. அரசியலமைப்பில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அவை, மக்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வதற்காகவே.
அரசியலமைப்புச் சபையில் பல்வேறு சித்தாந்தங்களைச் சேர்ந்தவர்கள் இருந்தனர். பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். ஆனால் அரசியலமைப்புச் சபை அர்த்தமுள்ள மற்றும் நேர்மறையான விவாதங்களை நடத்தியது. நமது மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களில் இருந்து நாம் உத்வேகம் பெற வேண்டும். இதன் மூலம் பாராளுமன்ற அவைகளில் நல்ல விவாதங்களை நடத்த முடியும். வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் நாட்டுக்காக உழைக்க நாம் ஒன்றுபட வேண்டும். சித்தாந்தங்களும், அவற்றை வெளிப்படுத்தும் முறைகளும் வேறுபடலாம். ஆனால் நாடு எப்போதும் அனைவருக்கும் முதன்மையானது.
நீதித்துறை, பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றம் உட்பட அனைவராலும் அரசியலமைப்பு சட்டம் பின்பற்றப்படுகிறது. அரசியலமைப்பை நிறைவேற்றுபவர்கள் திறமையும் தொலைநோக்கு பார்வையும் கொண்டவர்களாக இருந்தால், அரசியலமைப்புச் சட்டமும் திறன்மிக்கதாக மாறும் என்று பாபாசாகேப் அம்பேத்கர் கூறினார். நாம் எப்போதும் அரசியலமைப்புக்கு விசுவாசமாக இருந்து வருகிறோம். அரசியலமைப்பின் வழிகாட்டுதலின் கீழ் பணியாற்றி வருகிறோம். அது பாராளுமன்றமாகவோ அல்லது சட்டமன்றமாகவோ இருந்தாலும், அனைத்து ஜனநாயக நிறுவனங்களும் அரசியலமைப்பின் படி செயல்பட்டு வருகின்றன, தொடர்ந்து செயல்படும்.” என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
கோலி சிக்சர்: வீடியோ வைரல்
24 Nov 2024இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
-
அதிக முறை 150 ரன்கள் எடுத்து சச்சின் சாதனையை சமன் செய்தார் ஜெய்ஸ்வால்
24 Nov 2024பெர்த்:
-
5000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள்: டி20 கிரிக்கெட் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா சாதனை
24 Nov 2024இந்தூர்: 5000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை டி20 கிரிக்கெட் போட்டிகளில் முதல் இந்திய வீரராக மாபெரும் ஹர்திக் பாண்ட்யா சாதனை படைத்துள்ளார்.
-
ஐ.பி.எல். வரலாற்றில் முதல் முறை: ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்ட் ஏலம் ஷ்ரேயாஸ் அய்யர் ரூ .26.75 கோடிக்கு பஞ்சாப் எடுத்தது
24 Nov 2024துபாய்: ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகையாக ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்டை ஏலத்தில் எடுத்தது லக்னோ அணி.ரூ .20.75 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இறுதியாக ஏலம் எடுத்த நிலையில், ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தியத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-11-2024.
25 Nov 2024 -
நிறங்கள் மூன்று விமர்சனம்
25 Nov 2024துருவங்கள் பதினாறு படம் மூலம் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் கார்த்திக் நரேன் அதன் பிறகு அவர் இயக்கத்தில் வெளியான மாறன் மற்றும் மாபியா சாப்டர் ஒன் ஆகிய பட
-
லைன்மேன் விமர்சனம்
25 Nov 2024மின்சாரம் மற்றும் பொறியியல் கண்டுபிடிப்புகளை கையாளும் சுப்பையா மற்றும் அவரது மகன் செந்தில் ஆகியோரின் வாழ்க்கையை பற்றி பேசுகிறது இப்படம்.,
-
தங்கம் விலை குறைவு
25 Nov 2024 -
ஜீப்ரா விமர்சனம்
25 Nov 2024தெலுங்கில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் படம் ஜீப்ரா.