முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்டியா கூட்டணிக்கு மம்தாவை ஏன் தலைவராக்க கூடாது திரிணமுல் காங்கிரஸ் கேள்வி

திங்கட்கிழமை, 25 நவம்பர் 2024      இந்தியா
Mamta 2024-11-25

Source: provided

 

கொல்கத்தா:  'மம்தாவை இன்டியா கூட்டணி தலைவராக்க வேண்டும். காங்கிரஸால் பா.ஜ.,வை தோற்கடிக்க முடியாது' என திரிணமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் 6 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இது அக்கட்சி தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இது தொடர்பாக, அக்கட்சி மூத்த தலைவர் கல்யாண் பானர்ஜி நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: முதலில் ஹரியானாவிலும், இப்போது மஹாராஷ்டிராவிலும் காங்கிரஸ் போராடி தோல்வி அடைந்தது. ஆனால், பா.ஜ.,வை மம்தா மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியால் தோற்கடிக்க முடிந்தது. காங்கிரஸால் பா.ஜ.,வை தோற்கடிக்க முடியாது. 

மம்தாவை இன்டியா கூட்டணி தலைவராக்க வேண்டும். தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதால், காங்கிரஸ் ஏன் தனது ஈகோவை ஒதுக்கி வைத்துவிட்டு, இன்டியா கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பை மம்தா பானர்ஜியிடம் ஒப்படைக்கவில்லை? அவரால் மட்டுமே பா.ஜ.,வை தோற்கடிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து