எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை: மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சிவசேனா கட்சி வெறும் 20 இடங்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில் அக்கட்சியின் சட்டமன்ற தலைவராக ஆதித்யா தாக்கரே தேர்வாகியுள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 3 தினங்களுக்கு முன் வெளியானது. இந்த தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. குறிப்பாக சிவசேனா பிளவுக்கு பிறகு நடைபெற்ற இந்த சட்டசபை தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா படுதோல்வியை கண்டது. சுமார் 95 இடங்களில் போட்டியிட்ட அந்த கட்சி வெறும் 20 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேநேரம் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 57 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்தநிலையில் வெற்றி பெற்ற சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் மும்பையில் உள்ள கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவின் இல்லத்தில் நடைபெற்றது. இதில் சிவசேனா கட்சியின் இரு அவைகளின் சட்டமன்ற தலைவராக ஆதித்யா தாக்கரே ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மூத்த தலைவர் அம்பாதாஸ் தன்வே, மாநிலங்களவைக்கு கட்சியின் குழுத் தலைவராக முன்னாள் மந்திரி பாஸ்கர் ஜாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் தலைமைக் கொறடாவாக சுனில் பிரபு நியமிக்கப்பட்டுள்ளார் என்றார்.
வோர்லி தொகுதியில் கடந்த முறை 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற ஆதித்யா தாக்கரே இந்த முறை வெறும் 8801 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த 2019 தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் அவரது வெற்றி வித்தியாசம் குறைந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
நிறங்கள் மூன்று விமர்சனம்
25 Nov 2024துருவங்கள் பதினாறு படம் மூலம் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் கார்த்திக் நரேன் அதன் பிறகு அவர் இயக்கத்தில் வெளியான மாறன் மற்றும் மாபியா சாப்டர் ஒன் ஆகிய பட
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-11-2024.
25 Nov 2024 -
தங்கம் விலை குறைவு
25 Nov 2024 -
லைன்மேன் விமர்சனம்
25 Nov 2024மின்சாரம் மற்றும் பொறியியல் கண்டுபிடிப்புகளை கையாளும் சுப்பையா மற்றும் அவரது மகன் செந்தில் ஆகியோரின் வாழ்க்கையை பற்றி பேசுகிறது இப்படம்.,
-
ஜீப்ரா விமர்சனம்
25 Nov 2024தெலுங்கில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் படம் ஜீப்ரா.