எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜெட்டா : ஐ.பி.எல். தொடரின் 2-ம் நாள் மெகா ஏலம் நேற்று தொடங்கி நடைபெற்றது. இதில் சாம் கர்ரணை ரூ.2.40 கோடி ஏலம் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. குருனால் பாண்ட்யாவை ரூ.5.75 கோடிக்கு பெங்களூரு அணி ஏலம் எடுத்தது.
ஜெட்டா நகரில்...
ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களின் 2 நாள் ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. 7 மணி நேரம் நடந்த முதல் நாள் ஏலத்தில் 24 வெளிநாட்டவர் உள்பட 72 வீரர்கள் மொத்தம் ரூ.467.95 கோடிக்கு விற்கப்பட்டனர். இதில் 20 வீரர்கள் ரூ.10 கோடிக்கு மேல் விலை போனது வியப்பூட்டியது. ரிஷப் பண்ட் (ரூ.27 கோடி, லக்னோ), ஸ்ரேயாஸ் அய்யர் (ரூ.26¾ கோடி, பஞ்சாப்) ஆகியோர் புதிய உச்சத்தை தொட்டனர்.
ரோவ்மன் பவல்...
இந்நிலையில் 2-வது நாள் மெகா ஏலம் நேற்று தொடங்கியது. இதில் முதல் வீரராக ரோவ்மன் பவலை கொல்கத்தா அணி ரூ. 1.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இந்திய இளம் வீரரான பிரித்வி ஷாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. பஞ்சாப் கிங்ஸ் அணியின் முன்னள் கேப்டனான சாம் கர்ரணை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 2.40 கோடிக்கு வாங்கியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனான ஷாய் ஹோப் மற்றும் இந்திய விக்கெட் கீப்பரான கே.எஸ். பாரத் இருவரையும் எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.
குருனால் பாண்ட்யா...
ஆல் ரவுண்டரான நிதிஷ் ராணாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 4.2 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்திய ஆல் ரவுண்டரான குருனால் பாண்ட்யாவை ஏலத்தில் எடுக்க பெங்களூரு - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் பெங்களூரு அணி ரூ. 5.75 கோடிக்கு வாங்கியது. சென்னை அணியின் முன்னாள் வீரரான டேரில் மிட்செலை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வீரரான மார்கோ ஜான்சனை ஏலத்தில் எடுக்க பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் போட்டியிட்டன. முடிவில் பஞ்சாப் ரூ. 7 கோடிக்கு அவரை வாங்கியது.
வாஷிங்டன் சுந்தர்...
தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தரை ரூ. 3.20 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் வாங்கியுள்ளது. பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டனான பாப் டு பிளெஸ்சிஸை ரூ.2 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் வாங்கியுள்ளது. முன்னணி வீரர்களான வில்லியம்சன், கிளென் பிலிப்ஸ், ரகானே, மயங்க் அகர்வால், ஷர்துல் தாகூர் ஆகியோரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
நிறங்கள் மூன்று விமர்சனம்
25 Nov 2024துருவங்கள் பதினாறு படம் மூலம் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் கார்த்திக் நரேன் அதன் பிறகு அவர் இயக்கத்தில் வெளியான மாறன் மற்றும் மாபியா சாப்டர் ஒன் ஆகிய பட
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-11-2024.
25 Nov 2024 -
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்: மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியது இந்திய அணி
25 Nov 2024பெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றதை அடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு இ
-
லைன்மேன் விமர்சனம்
25 Nov 2024மின்சாரம் மற்றும் பொறியியல் கண்டுபிடிப்புகளை கையாளும் சுப்பையா மற்றும் அவரது மகன் செந்தில் ஆகியோரின் வாழ்க்கையை பற்றி பேசுகிறது இப்படம்.,
-
தங்கம் விலை குறைவு
25 Nov 2024 -
ஜீப்ரா விமர்சனம்
25 Nov 2024தெலுங்கில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் படம் ஜீப்ரா.