முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2023- 2024-ல் பா.ஜ. கட்சி பெற்ற தேர்தல் நன்கொடை எவ்வளவு? தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2024      இந்தியா
Election-Commision 2023-04-20

டெல்லி, 2023 - 2024 நிதியாண்டில் பா.ஜ.க.வுக்கு ரூ.2,244 கோடி தேர்தல் நன்கொடை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் நன்கொடை தொடர்பான புள்ளி விவரங்கள், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் தனி நபர்கள், அறக்கட்டளைகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பா.ஜ.க. 20,000த்திற்கும் அதிகமான நன்கொடைகளை ரூ.2,244 கோடி வசூலித்து இருப்பது தெரியவந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 3 மடங்கு அதிகமாகும்.

பா.ஜ.க.விற்கு அடுத்தப்படியாக பிஆர்எஸ் கட்சிக்கு ரூ.580 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் மூலமாக எதிர்க்கட்சிகள் தொழில் அதிபர்களை மிரட்டி தங்கள் கட்சிக்கு பா.ஜ.க. தேர்தல் நன்கொடை பெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. கடந்த பிப்ரவரி 15ம் தேதி தேர்தல் பத்திர முறை சட்ட விரோதமானது எனக்கூறி, அவற்றை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. தேர்தல் பத்திர முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று தெரிவித்த சுப்ரீம் கோர்ட், தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை வங்கிகள் உடனடியாக நிறுத்த உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, கடந்த 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி வரை பெறப்பட்ட தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்கள் கடந்த மார்ச் மாதம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து