முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்கலை. மாணவி விவகாரம் எதிரொலி: புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு காவல்துறை கடும் கட்டுப்பாடு

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2024      தமிழகம்
police-2024-01-01

குனியமுத்தூர், 2025 புத்தாண்டு பிறக்க இன்னும் 4 நாட்களே உள்ளன. தமிழகத்தில் சென்னையை அடுத்து பெரிய நகரமான கோவையும் புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகிறது. இந்நிலையில் அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தை தொடர்ந்து புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு 

காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள் மற்றும் ரிசார்ட்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தை விமரிசையாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இன்னிசை கச்சேரி, சிறப்பு பாடகர்கள் வருகை, பபே உணவு முறை, வாணவேடிக்கை என பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான முன்பதிவும் தொடங்கி நடந்து வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் தடுக்கும் வகையில் ஓட்டல், லாட்ஜ்களில் தீவிர சோதனையும் நடத்தப்படுகிறது. சந்தேக நபர்கள் யாராவது வந்து சென்றால் தகவல் தெரிவிக்குமாறு ஓட்டல் ஊழியர்களிடம் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதற்கிடையே சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதன்காரணமாக எப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பை அதிகரிக்கவும், புத்தாண்டு கொண்டாட்டங்களில் கட்டுப்பாடு விதிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக கோவை மாநகர போலீஸ் உதவி கமிஷனர் அஜய் தங்கத்திடம் பேசியபோது அவர் கூறியதாவது:- புத்தாண்டு கொண்டாட்டம் என்பது அனைவராலும் கொண்டாடப்படக்கூடிய ஒன்று. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அதே சமயத்தில் அது எல்லை மீறுவதாக இருக்கக் கூடாது. பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம்வயதினர் நள்ளிரவு 12 மணி வரும்போது, உற்சாக மிகுதியில் புத்தாண்டை கொண்டாட முயல்வார்கள். நடுரோட்டில் வைத்து கேக் வெட்டி கொண்டாடுவது மற்றும் பைக் ரேஸ் போன்ற சாகச செயல்களில் ஈடுபட்டு, பொது மக்களுக்கு தொந்தரவை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது. அவ்வாறு எல்லை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது. அதிவேகமாக வாகனங்களை இயக்கக் கூடாது. அனுமதி இல்லாமல் பொது இடத்தில் வைத்து புத்தாண்டு கொண்டாடக்கூடாது.

மேலும் சிலர் புத்தாண்டு கொண்டாட குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு, வெளியே கோவில் மற்றும் பொது இடங்களுக்கு சென்று மகிழ்வது உண்டு. அவ்வாறு வீட்டை பூட்டி விட்டு செல்லும்போது காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விலை உயர்ந்த நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை வீட்டில் வைத்து விட்டுச் செல்லக்கூடாது. நாமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பிறர்க்கும் தொந்தரவு கொடுக்காத நிலையில் புத்தாண்டை கொண்டாட வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் சட்டத்தை மீறுவதை காவல்துறை ஒருபோதும் அனுமதிக்காது.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், அசம்பாவித செயல்களை தடுக்கும் பொருட்டு, அன்றைய தினம் நள்ளிரவு கோவை மாநகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. எனவே பொதுமக்களின் அமைதியை சீர்குலைக்க முயல்பவர்கள், சட்டத்தின் முன் கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து