முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2024      தமிழகம்
ADMK

சென்னை, பல்கலை. மாணவி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகங்களின் முன்பு அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அ.தி.முக. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இன்று காலை 10.30 மணியளவில மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். சட்டம், ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு தவறி விட்டது. தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பெண்கள், சிறுமிகள், வயதானோர் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சீண்டல்களை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து