முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவுக்கு கேரள அரசு 2 நாள் துக்கம் அனுசரிப்பு

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2024      இந்தியா
MD Vasudevan-Nair-2024-12

திருவனந்தபுரம், புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு கேரள அரசு 2 நாள் துக்கம் அனுசரிக்க முடிவு செய்துள்ளது.

புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், 'ஞானபீடம்' விருது பெற்ற எம்.டி.வாசுதேவன் நாயர் (91) நேற்று இரவு காலமானார். இதய செயலிழப்பு காரணமாக, கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். 54 படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ள எம்.டி வாசுதேவன், 7 படங்களை இயக்கியும் உள்ளார். மேலும் சிறந்த திரைக்கதைக்காக 4 தேசிய விருதுகளை வென்றுள்ளார். எம்.டி.வாசுதேவன் மறைவுக்கு பிரதமர் மோடி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது மறைவுக்கு கேரள அரசு நேற்றும், இன்றும் (2 நாட்கள்) துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது. நேற்று நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது சித்தாராவில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் பிறகு அவரது இறுதிச் சடங்குகள் மாலை நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து