முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிறிஸ்துமஸ் நாளில் உக்ரைன் மீது தாக்குதல் ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் கடும் கண்டனம்

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2024      உலகம்
Joe-Biden 2023 03 28

வாஷிங்டன், கிறிஸ்துமஸ் நாளில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யாவுக்கு அதிபர் ஜோபைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைனுக்கு அதிகளவில் ஆயுதங்கள் கொடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகிறது. இதில் அமெரிக்கா தொடர்ந்து உக்ரைனுக்கு ஆயுதங்களை அளிக்கிறது.இதற்கிடையே கிறிஸ்து மஸ் நாளான நேற்று முன்தினம் உக்ரைன் மீது ரஷியா தீவிர தாக்குதலை நடத்தியது. உக்ரைனின் எரிசக்தி கட்ட மைப்புகளை குறிவைத்து 78 ஏவுகணைகள், 106 டிரோன்கள் மூலம் ரஷிய படையினர் தாக்குதல் நடத்தினர்.

இதில் 59 ஏவுகணைகளையும் 54 டிரோன்களையும் உக்ரைன் வான்பாதுகாப்பு ஏவுகணைகள் இடைமறித்து அழித்தன. 52 டிரோன்கள் மின்னணு ஆயுதங்கள் மூலம் செயலிழக்கச் செய்யப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் இத்தாக்கு தலுக்கு ரஷியாவிற்கு அமெரிக்கா அதிபர் ஜோபைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

உக்ரைனில் ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலை கண்டிக்கிறேன். குளிர்காலத்தில் உக்ரைன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் சூழலில், மின்சாரத்தை துண்டிக்க தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நான் தெளிவாக சொல்கிறேன். உக்ரைன் மக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ விரும்புகிறார்கள். ரஷியாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைன் வெற்றி பெறும் வரை அமெரிக்காவும், சர்வதேச சமூகமும் உக்ரைனுடன் தொடர்ந்து நிற்க வேண்டும். உக்ரைனுக்கு அதிகமான ஆயுதங்கள் வழங்குமாறு பாதுகாப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். ரஷியாவின் படைகளுக்கு எதிராக, உக்ரைன் மக்களின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து