முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: ஆப்கானில் பலி 46 ஆக உயர்வு

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2024      உலகம்
Pakistan-Attack-2024-12-26

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கொடூர தாக்குதலால் ஆப்கனில் பலி எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது.

தங்களது அண்டை நாடான ஆஃப்கன் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் உயிர் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வான்வழியாக நடத்தப்பட்ட இந்த தாக்குதல் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழலை உண்டாக்கி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி பொறுப்பு ஏற்றது முதலே அந்நாட்டின் பெண்களுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக மாற்றப்பட்டுள்ளன. பல கெடுபிடிகள், மூட நம்பிக்கைகள், பிற்போக்கு தனமான திட்டங்கள் இருப்பதாக சர்வதேச அளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தான் அங்கு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு தங்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டுகிறது அதன் அண்டை நாடான பாகிஸ்தான். குறிப்பாக ஆப்கானிஸ்தானில் இருக்கும் பாகிஸ்தான் தலிபான் கிளர்ச்சி அமைப்பு தங்கள் மீது தாக்கி வருவதாக குற்றம் சாட்டுகிறது பாகிஸ்தான். இந்த நிலையில் தான் நேற்று ஆப்கானிஸ்தான் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான். ஆஃப்கன் நாட்டில் பக்டிக்கா மாகாணத்தில் 7 கிராமங்கள் குறிவைத்து தாக்கப்பட்டதாக தெரிகிறது.

இதில் ஒரு கிராமம் முற்றிலும் உருகுலைந்ததாக ஆஃப்கன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த கோர தாக்குதலால் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் மரணம் அடைந்ததாக நேற்று முன்தினம் தகவல் வெளியான நிலையில், உயிர் பலி எண்ணிக்கை 46ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற தகவலும் கிடைத்துள்ளது. பயங்கரவாதிகளின் மறைவிடங்களை குறிவைத்தே பாகிஸ்தான் இந்த தாக்குதல் நடத்தியதாக கூறினாலும், அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து இருப்பதாகவும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்றும் தலிபான் பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து