முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தண்டனை அறிவிப்பை வெளியிட தடைக்கோரி டிரம்ப் அப்பீல்

வியாழக்கிழமை, 9 ஜனவரி 2025      உலகம்
Trump 2023 03 05

Source: provided

நியூயார்க்: ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் தனது மீதான தண்டனை அறிவிப்பை நீதிமன்றம் வெளியிட தடைக்கோரி அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்டு டிரம்ப் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை எதிர்த்து குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிட்டார். அப்போது, தனக்கும் ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் என்பவருக்கும் இடையே இருந்த தொடர்பு குறித்து வெளியே சொல்லாமல் இருப்பதற்காக அந்த நடிகைக்கு 1.3 லட்சம் டாலர் (சுமார் ரூ.11 கோடி) டிரம்ப் அளித்ததாகக் கூறப்படுகிறது. 

இந்தப் பணப் பரிமாற்றத்தை மறைப்பதற்காக, தனது நிறுவனத்தின் கணக்குகளில் டிரம்ப் முறைகேடு செய்ததாகவும் தேர்தல் முடிவுகளில் தவறான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஆதரவாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பிரசார நிதியை டிரம்ப் முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த விவகாரத்தில் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளையும் நியூயார்க் நகரிலுள்ள மேன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஆண்டு மே மாதம் உறுதி செய்தது. குற்றவியல் வழக்கில் அமெரிக்காவின் அதிபராக இருந்த ஒருவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யட்டது அதுவே முதல்முறை.

கடந்த நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்று அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள சூழலில், இந்த வழக்கில் டிரம்ப்புக்கான தண்டனை வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படுவதாக உள்ளது. எனினும், அதனை எதிர்த்து டிரம்ப் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதைப் பரிசீலித்த மேன்ஹாட்டன் நீதிபதி ஜுவான் எம். மெர்சன், மனுவைத் தள்ளுபடி செய்தார். மேலும், சிறைத்தண்டனையோ, அபராதமோ விதிக்கப்படாது என்று நீதிபதி ஜுவான் எம். மெர்சன் விளக்கம் அளித்திருந்தார். இருப்பினும், குற்றவியல் வழக்கில் தண்டனை என்பது விளைவுகளை ஏற்படுத்தும் என்று உச்சநீதிமன்றத்தில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து