முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க இன்று அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும்: உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவிப்பு

வியாழக்கிழமை, 9 ஜனவரி 2025      தமிழகம்
Ration-shop

சென்னை, பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்காக இன்று அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழர் திருநாளாம் தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் சேர்த்து மொத்தம் 2,20,94,585 குடும்பஅட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு ஆகியவற்றை வழங்க ஆணையிட்டுள்ளார். மேலும், பொங்கல் பரிசுடன் விலையில்லா வேட்டி மற்றும் சேலை வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், நேற்று (09.01.2025 வியாழன்) சைதாப்பேட்டை சின்ன மலையில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு அனைவரும் விரைந்து பெற்றிட ஏதுவாக இன்று (10.01.2025 வெள்ளிக்கிழமை) அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்படுகிறது. அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களும் பொங்கல் பரிசு தொகுப்பினைப் பெற்றுப் பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து