முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதி நெருக்கடியால் பொங்கலுக்கு ரூ.ஆயிரம் வழங்க முடியவில்லை: சட்டசபையில் அமைச்சர் விளக்கம்

வியாழக்கிழமை, 9 ஜனவரி 2025      தமிழகம்
Thangam 2023 04 05

சென்னை, புயல், வெள்ள நிவாரணப் பணிகளை மாநில அரசு நிதி மூலம் மேற்கொள்ளப்பட்டதால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 வழங்க முடியவில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. முந்தைய ஆண்டுகளில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் பணம் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டும் ரூ.1,000 பணம் கொடுக்கப்படும் என மக்கள் எதிர்ப்பார்த்து வந்தனர்.

இந்த சூழலில், இந்த ஆண்டில் தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால், மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

இந்த நிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 வழங்காததற்கான காரணம் குறித்து சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:- பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக தமிழ்நாடு அரசு ரூ.280 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. புயல், வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசிடம் ரூ.37,000 கோடி கேட்கப்பட்டது. ஆனால், ரூ.276 கோடி மட்டுமே கிடைத்தது. பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு இன்னும் தரவில்லை. இதனால், மாநில அரசின் நிதியைக் கொண்டே அவை ஈடுகட்டப்படுகின்றன. இந்த காரணங்களால்தான் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1,000 வழங்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து