முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் நேரத்தில் பரிசுத்தொகை: அமைச்சர் பேச்சால் சுவாரஸ்யம்

வியாழக்கிழமை, 9 ஜனவரி 2025      தமிழகம்
Durai-Murugan 2024-06-21

சென்னை, பொங்கல் பரிசுத் தொகை குறித்து பேரவையில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தேர்தல் வந்தால் பொங்கல் பரிசு தருவது பற்றி பார்க்கலாம் என்று நகைச்சுவையாகப் பதில் அளித்துள்ளார். இதனால், சட்டப்பேரவையில் கலகலப்பு நிலவியது.

தமிழகம் முழுவதும் ஈரோடு தொகுதி தவிர்த்து மற்ற பகுதிகளில் இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கரும்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சட்டப்பேரவையில் நேற்று பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பரிசுத் தொகை வழங்குவது குறித்து அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி பேசுகையில், அதிமுக ஆட்சிக் காலத்தில் பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.2500 வழங்கப்பட்டது. ஆனால் அப்போது ரூ.5000 கொடுக்க வேண்டும் என திமுக கூறியது. இப்போதோ ரூ.1,000 கூட கொடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் துரைமுருகன், 2021ஆம் ஆண்டு தேர்தல் இருந்தது. அதனால் நீங்கள் 2500 ரூபாய் கொடுத்தீர்கள். ஆனால் இப்போது தேர்தல் காலம் இல்லை. பொங்கல் பரிசுத் தொகை வழங்குவது குறித்து தேர்தல் வரும்போது பார்க்கலாம் என்று கூறியது கலகலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். ஆனால், அதன் பிறகு அதிமுக ஆட்சியின்போதும் பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படவில்லை. ஆனால், தேர்தல் வந்தபோதுதான் அதிமுக அரசு பரிசுத் தொகையும் வழங்கியது என்று கூறியிருந்தார். இந்த நிலையில், துரைமுருகன் பேச்சுக்கு இரண்டுவிதமான கருத்துகள் நிலவுகின்றன. இது சர்ச்சையாகும் வாய்ப்பும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து