முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமலாக்கத்துறைக்கு அபராதம்: மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு

புதன்கிழமை, 22 ஜனவரி 2025      இந்தியா
court 2024-12-30

Source: provided

மும்பை: அமலாக்க இயக்குனரகத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மும்பை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ராகேஷ் ஜெயின் என்பவர் மீது குல் அச்ரா என்பவர் பண மோசடி மற்றும் ஒப்பந்த மீறல் தொடர்பாக அமலாக்கத்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றது.

இந்த விசாரணைக்கு எதிராக ராகேஷ் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி மிலிந்த் ஜாதவ் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் மக்களை துன்புறுத்துவதன் மூலம் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க முடியாது என்றும் புலனாய்வு அமைப்புகள் சட்டத்தின் அளவுகோல்களுக்குள் நடந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் அமலாக்க இயக்குனரகத்திற்கு ரூ.1 லட்சமும், ராகேஷ் மீது தவறாக புகார் அளிக்கப்பட்டதாகக் கூறி அவர் மீது புகார் அளித்த அச்ராவுக்கு ரூ.1 லட்சமும் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து