முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மண்டல, மகர விளக்கு பூஜை: சபரிமலையில் தரிசனம் செய்த 53 லட்சம் பேர்

புதன்கிழமை, 22 ஜனவரி 2025      இந்தியா
Sabarimala 2024-11-24

Source: provided

திருவனந்தபுரம்: மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு,  சபரிமலை அய்யப்பன் கோவிலில் 53 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

2024-25-ம் ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு சீசன் கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. பிரசித்தி பெற்ற மண்டல பூஜை டிசம்பர் 26-ந் தேதி நடைபெற்றது. பின்னர் மகர விளக்கு பூஜைக்காக 30-ந் தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. அதைதொடர்ந்து கடந்த 14-ந் தேதி புகழ்பெற்ற மகர விளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் மகரஜோதியை தரிசனம் செய்தனர்.

மண்டல, மகரவிளக்கு சீசன் நிறைவாக 3 நாட்களுக்கு முன் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதிஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 6.30 மணிக்கு பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி ராஜ ராஜ வர்மா சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து நடை அடைக்கப்பட்டது. அதைதொடர்ந்து நடைபெற்ற பாரம்பரிய சம்பிரதாய சடங்குகளுக்கு பின் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி 18-ம் படி வழியாக இறங்கினார்.

இந்த நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலத்தில் மட்டும் 53 லட்சத்து 9 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர் என்று தேவசம்போர்டு மந்திரி அறிவித்துள்ளார். இதன்மூலம் 440 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து