முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிண்டி கிங் நோய்த்தடுப்பு ஆய்வகத்திற்கு ரூ.12 கோடி தமிழக அரசாணை வெளியீடு

புதன்கிழமை, 22 ஜனவரி 2025      தமிழகம்
Tamilnadu-Assemble 2024-12-02

Source: provided

சென்னை: கிண்டியில் உள்ள கிங் நோய்த்தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு மருந்துகள் தர கட்டுப்பாடு ஆய்வக மேம்பாட்டிற்காக ரூ. 12 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது பற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:- தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் கிண்டியில் உள்ள நோய் தடுப்பு கிங் மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு, ரூ. 12 கோடி மதிப்பில் நவீன வகை கருவிகளுடன் மருந்துகள் தர கட்டுப்பாடு ஆய்வக மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

1948ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத்தின் மருந்துகளின் தூய்மை மற்றும் பாதுகாப்பு திறன் அறிய நோய் தடுப்பு கிங் மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உயிரியல் பொருள்கள் கட்டுப்பாட்டுத் துறை நிறுவப்பட்டது. இங்கு மருந்து சார்ந்த பாதுகாப்பு கண்காணிப்பு, இந்திய இரத்த கண்காணிப்பு திட்டம் போன்ற திட்டங்களின் மருந்து சார்ந்த தீய விளைவுகள் மற்றும் புகார்கள் தன்மை கண்டறிதலும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நவீன கட்டமைப்புடன் தர மேலாண்மை மிக்க ஆய்வகத்திடமிருந்து நம்பகதன்மையுடன் உள்ள ஆய்வறிக்கை பெறப்படும். இது மருந்துகளுக்கும் மருத்துவ சாதனங்கள் தொடர்புடைய தீவிர எதிர்மறை விளைவுகள், ரத்த பரிமாற்று எதிர்வினைகள், தடுப்பூசிகளுக்குப் பிறகு ஏற்படும் எதிர்மறை விளைவுகள் கண்காணிப்பதில் உதவியாக இருக்கும், இதனால் நோயின் காரணமாக உருவாகும் வியாதி, மரணத்தை மற்றும் மருத்துவமனையில் தங்கும் காலத்தை குறைத்து, நோயினால் உண்டாகும் பொருளாதார சுமையைக் குறைக்கும்.

இந்த முயற்சி தமிழ்நாடு அரசின் மாநிலம் முழுவதும் உயர் தரமான மருத்துவ வசதி மற்றும் மருந்து பாதுகாப்பு குறித்த உறுதிப்பாட்டை மேற்கோள்காட்டுகிறது என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து